டாடா டியாகோ என்ஆர்ஜி

டாடா டியாகோ என்ஆர்ஜி
Style: ஹேட்ச்பேக்
6.70 - 8.80 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

டாடா டியாகோ என்ஆர்ஜி கார் 6 வேரியண்ட்டுகளில் 4 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டாடா டியாகோ என்ஆர்ஜி காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டாடா டியாகோ என்ஆர்ஜி காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டாடா டியாகோ என்ஆர்ஜி காரை ஹேட்ச்பேக் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டாடா டியாகோ என்ஆர்ஜி கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

டாடா டியாகோ என்ஆர்ஜி பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
ஹேட்ச்பேக் | Gearbox
6,69,885
ஹேட்ச்பேக் | Gearbox
7,29,900
ஹேட்ச்பேக் | Gearbox
7,84,900

டாடா டியாகோ என்ஆர்ஜி சிஎன்ஜி மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
ஹேட்ச்பேக் | Gearbox
7,64,861
ஹேட்ச்பேக் | Gearbox
8,24,900
ஹேட்ச்பேக் | Gearbox
8,79,900

டாடா டியாகோ என்ஆர்ஜி மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 20.09
Manual சிஎன்ஜி 0

டாடா டியாகோ என்ஆர்ஜி விமர்சனம்

டாடா டியாகோ என்ஆர்ஜி வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

டாடா டியாகோ காரின் அடிப்படையில் அதிக கவர்ச்சிகரமான அம்சங்கள் கொண்ட மாடலாக டாடா டியாகோ என்ஆர்ஜி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் எஸ்யூவி கார்களில் இருப்பது போன்ற ஏராளமான சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்புறத்திலும், பின்புறத்திலும் ஸ்கிட் பிளேட்டுகல், கவர்ச்சிகரமான 15 அங்குல ஸ்டீல் சக்கரங்கள், பிளாஸ்டிக் பாடி கிளாடிங் சட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ரூஃப் ரெயில்கள், சைடு மிரர்கள், பி பில்லர், சி பில்லர் மற்றும் கூரையில் கருப்பு வண்ண அலங்கார அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஃபாரஸ்ட்டா க்ரீன், ஸ்னோ ஒயிட், ஃபயர் ரெட் மற்றும் க்ளவுடி க்ரே ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த கார் சாதாரண டியாகோ காரைவிட 11 மிமீ கூடுதல் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

டாடா டியாகோ என்ஆர்ஜி எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய டாடா டியாகோ என்ஆர்ஜி காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

டாடா டியாகோ என்ஆர்ஜி மைலேஜ்

புதிய டாடா டியாகோ என்ஆர்ஜி காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 20.9 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையிலும் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை இந்த பெட்ரோல் எஞ்சின் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

டாடா டியாகோ என்ஆர்ஜி முக்கிய அம்சங்கள்

புதிய டாடா டியாகோ என்ஆர்ஜி காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், மேனுவல் ஏசி சிஸ்டம், பியானோ பிளாக் அலங்கார அம்சத்துடன் சென்டர் கன்சோல், 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டம், கருப்பு வண்ண இன்டீரியர், ஆட்டோ ஃபோல்டிங் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

டாடா டியாகோ என்ஆர்ஜி தீர்ப்பு

எஸ்யூவி ஸ்டைலில் ஒரு பட்ஜெட் ஹேட்ச்பேக் காரை வாங்க விரும்புவோரின் எதிர்பார்ப்புகளை டாடா டியாகோ என்ஆர்ஜி கார் சிறப்பாக பூர்த்தி செய்யும். அதிக க்ரவுண்ட் க்ளியரன்ஸ் இந்த காரின் மற்றொரு முக்கிய அம்சமாக கூறலாம். தனித்துவமான ஹேட்ச்பேக் காரை வாங்க விரும்புவோருக்கும் இது சிறப்பானதாக இருக்கும்.

வண்ணங்கள்


Cloudy Grey
Grassland Beige
Fire Red
Polar White

டாடா டியாகோ என்ஆர்ஜி படங்கள்

டாடா டியாகோ என்ஆர்ஜி Q & A

புதிய டாடா டியாகோ என்ஆர்ஜி காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

ஒரே வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
டாடா டியாகோ என்ஆர்ஜி காரில் டீசல் எஞ்சின் தேர்வு உள்ளதா?

டாடா டியாகோ என்ஆர்ஜி காரில் டீசல் எஞ்சின் தேர்வு இல்லை

Hide Answerkeyboard_arrow_down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X