டாடா டிகோர் இவி

டாடா டிகோர் இவி
Style: செடான்
12.49 - 13.75 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

டாடா டிகோர் இவி கார் 4 வேரியண்ட்டுகளில் 3 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டாடா டிகோர் இவி காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டாடா டிகோர் இவி காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டாடா டிகோர் இவி காரை செடான் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டாடா டிகோர் இவி கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

டாடா டிகோர் இவி எலக்ட்ரிக் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
செடான் | Gearbox
12,49,000
செடான் | Gearbox
12,99,000
செடான் | Gearbox
13,49,000
செடான் | Gearbox
13,75,000

டாடா டிகோர் இவி மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual எலக்ட்ரிக் 0

டாடா டிகோர் இவி விமர்சனம்

டாடா டிகோர் இவி வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. பழைய மாடலின் டிசைன் அம்சங்கள் பெரும்பாலும் தக்கவைக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், சில சிறிய மாற்றங்கள் இந்த காரில் செய்யப்பட்டுள்ளன. முன்புறத்தில் அசத்தலான க்ரில் அமைப்பு, அதன் நடுநாயகமாக டாடா லோகோ கம்பீரமாக வீற்றிருக்கிறது. இந்த காரின் முன்புற பம்பர் மாற்றப்பட்டுள்ளது. அதில், நீல வண்ணத்திலான பாகம் இதனை எலெக்ட்ரிக் கார் என்பதை கூறும் வகையில் இருக்கிறது. எல்இடி லைட்டுகள் இல்லை. ஜன்னல்களுக்கு கீழ்பகுதியில் க்ரோம் பட்டை கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அலாய் சக்கரங்கள் மிகவும் கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட்டுள்ளன. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. எலெக்ட்ரிக் காருக்குரிய பேட்ஜ், டாடா லோகோ மற்றும் டெயில் லைட்டுகளை இணைக்கும் க்ரோம் பட்டை, பம்பரில் நீல வண்ண அலங்கார விஷயங்கள் முக்கிய அம்சங்களாக உள்ளன.

உட்புறத்திலும் மிக சிறப்பான இடவசதியுடன் காட்சி அளிக்கிறது. நேர்த்தியான டேஷ்போர்டு டிசைன் இடம்பெற்றுள்ளது.இருக்கைகளில் எம்ப்ராய்டரி வேலைப்பாடு கவ்கிறது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரில் 316 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது.

டாடா டிகோர் இவி எஞ்சின் மற்றும் செயல்திறன்


டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் ஸிப்ட்ரான் என்ற பெயரில் குறிப்பிடப்படும் மின்சார மோட்டார், பேட்டரி, கியர்பாக்ஸ் ஆகியவை இணைந்து செயல்படும் புதிய தொழில்நுட்ப தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 26kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியுடன் 55kW செயல்திறனை வெளிப்படுத்தும் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 72 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

டாடா டிகோர் இவி மைலேஜ்

டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 306 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சாதாரண சார்ஜர் மூலமாக பேட்டரியை சார்ஜ் ஏற்றினால், 0 - 80 சதவீதம் என்ற அளவிற்கு சார்ஜ் ஆவதற்கு 8.5 மணிநேரம் பிடிக்கும். ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால் 60 நிமிடங்களில் இதே அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிடலாம்.

டாடா டிகோர் இவி முக்கிய அம்சங்கள்

புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழஙங்கப்பட்டுள்ளது. 4 ஸ்பீக்கர்கள் மற்றும் ட்வீட்டர்களுடன் கூடிய சிறந்த மியூசிக் சிஸ்டமும் குறிப்பிடத்தக்க விஷயம். இந்த காரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது.

இந்த காரில் இரண்டு ஏர்பேக்குகள், ஹில் அசென்ட் மற்றும் டிசென்ட் கன்ட்ரோல் தொழில்நுட்ப வசதிகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

டாடா டிகோர் இவி தீர்ப்பு

இந்திய மின்சார கார் சந்தையில் சரியான பட்ஜெட்டில் மிகச் சிறந்த தொழில்நுட்ப அ்ம்சங்களுடன் புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் வந்துள்ளது. மேலும், விலை அடிப்படையில் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்பதுடன், கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக கூறலாம்.

வண்ணங்கள்


Signature Teal Blue
Daytona Grey
Magnetic Red

டாடா டிகோர் இவி படங்கள்

டாடா டிகோர் இவி Q & A

டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்இசட் ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் எத்தனை பேர் பயணிக்கலாம்?

5 பேர் பயணிப்பதற்கான இடவசதியை பெற்றுள்ளது

Hide Answerkeyboard_arrow_down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X