ஃபோக்ஸ்வேகன் டி-ரோக்

ஃபோக்ஸ்வேகன் டி-ரோக்
Style: எஸ்யூவி
21.35 - 21.35 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

ஃபோக்ஸ்வேகன் டி-ரோக் கார் 1 வேரியண்ட்டுகளில் 4 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஃபோக்ஸ்வேகன் டி-ரோக் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஃபோக்ஸ்வேகன் டி-ரோக் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஃபோக்ஸ்வேகன் டி-ரோக் காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஃபோக்ஸ்வேகன் டி-ரோக் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ஃபோக்ஸ்வேகன் டி-ரோக் பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
21,35,000

ஃபோக்ஸ்வேகன் டி-ரோக் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 17.85

ஃபோக்ஸ்வேகன் டி-ரோக் விமர்சனம்

ஃபோக்ஸ்வேகன் டி-ரோக் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் பிரிமீயம் 5 சீட்டர் எஸ்யூவி மாடலாக ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் இந்த எஸ்யூவிக்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. நேர்த்தியான டிசைன், போதுமான வசதிகளுடன் மிகச் சரியான விலையில் கிடைக்கிறது. இந்த காரில் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் மற்றும் க்ரில் அமைப்பு ஒன்றாக இருப்பது போல டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. பனி விளக்குகள் பம்பரில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், பெரிய ஏர்டேம் பகுதி ஆகியவை இணைந்து வசீகரமான தோற்றத்தை தருகிறது.

பக்கவாட்டில் 17 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், வலிமையான தோற்றத்தை தரும் டி பில்லர், ரூஃப் ரெயில்கள் ஆகியவை சிறப்பு சேர்க்ககின்றன. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள், கிளாடிங் சட்டங்கள், ஸ்கிட் பிளேட் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. டிகுவான் எஸ்யூவியை பிரதிபலிக்கும் வகையிலேயே இன்டீரியர் டிசைன் இருக்கிறது. சில சிறிய மாற்றங்களுடன் வேறுபடுகிறது.

ஃபோக்ஸ்வேகன் டி-ரோக் எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ எவோ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

ஃபோக்ஸ்வேகன் டி-ரோக் மைலேஜ்

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்ட மாடல் லிட்டருக்கு 17.85 கிமீ மைலேஜை வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் இந்த மைலேஜில் சற்று குறைய வாய்ப்பு இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் டி-ரோக் முக்கிய அம்சங்கள்


ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, 6 ஸ்பீக்கர்களுடன் மியூசிக் சிஸ்டம், 11.3 அங்குல திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பனரோமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகள் உள்ளன.

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டி-ரோக் தீர்ப்பு

நேர்த்தியான டிசைன், சிறந்த எஞ்சின், உற்சாகத்தை தரும் ஓட்டுதல் அனுபவத்தை பெற விரும்புவோருக்கு புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி மிகச் சிறந்த தேர்வாக அமையும். கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புத் தரத்திலும் சிறந்த தேர்வாக முன்னிறுத்துகிறது.

வண்ணங்கள்


Ravenna Blue
Indium Grey
Pure White
Kurkuma Yellow

ஃபோக்ஸ்வேகன் டி-ரோக் படங்கள்

ஃபோக்ஸ்வேகன் டி-ரோக் Q & A

ஃபோக்ஸ்வேகன் டி ராக் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

அனைத்து வசதிகளும் கொண்ட ஒரே வேரியண்ட்டில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
ஃபோக்ஸ்வேகன் டி ராக் காரில் டீசல் எஞ்சின் தேர்வு உள்ளதா?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X