டொயோடா எடியோஸ் முன்பதிவு அடுத்த மாதம் துவக்கம்: பிராண்ட் அம்பாசடர் ஏ. ஆர். ரஹ்மான்

மும்பை: டொயோடா எடியோஸின் முன்பதிவு அடுத்த மாதம் முதல் துவங்குகிறது. இதன் பிராண்ட் அம்பாசடராக இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த கார் கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இது வரை டொயோடா இன்னோவா எம்யுவி, பார்ச்சுனர் எஸ்யுவி, செடான் என நல்ல கார்களை அளித்துள்ளது.

அடுத்த மாதம் முன்பதிவு துவங்கவிருப்பதால் டொயோடா அடுத்த ஆண்டுக்குள் 65,000 கார்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. டொயோடா எடியோஸ் செடானை வரும் டிசம்பரிலும், காம்பாக்ட் எடியோஸை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திலும் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த தகவலை டொயோடா கிர்லோஷ்கரின் தலைவர் தெரிவித்தார்.

பெங்களூரில் தனது தொழிற்சாலையை அமைக்க டொயோடா ரூ. 3,200 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த தொழிற்சாலை 70000 கார்கள் தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். தற்போது 1.5 லட்சம் கார்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 65000 கார்கள் எடியோஸாக இருக்கும்.

பெங்களூர் தொழிற்சாலை துவங்கிய பிறகு 2 லட்சம் கார்கள் தயாரிக்கப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார். எடியோஸ் விற்பனையை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது டொயோடா.

ஏனெனில், இந்த கார் உள்நாட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. இதன் பிராண்ட் அம்பாசடராக இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் நியமிக்கப்படுள்ளார்.

Most Read Articles

English summary
The race is getting fueled with Toyota entering into the foray with its Etios, for which the booking is scheduled for next month. Toyota has so far made a good stint with its range vehicles like Innova MUV and Fortuner SUV in addition to a range of sedans. With the booking slated for next month, Toyota intends to deliver 65000 units by next year. Toyota has planned to roll down the sedan version of Etios initially in this December to be followed by the compact version by March 2011. And Toyota has romped home the celebrity aspect with AR Rahman as brand ambassador.
Story first published: Friday, November 19, 2010, 13:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more