இந்தியாவில் 508 செடான் காருடன் 2வது இன்னிங்சை துவங்கும் பியூஜியட்

Peugeot 508
அடுத்த ஆண்டு 508 பிரிமியம் செடான் காரை அறிமுகப்படுத்தி இந்தியாவில் தனது இரண்டாவது இன்னிங்சை துவங்க பியூஜியட் திட்டமிட்டுள்ளது.

பிரான்சை சேர்ந்த பியூஜியட் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் பிரமியர் நிறுவனத்துடன் இணைந்து கார் விற்பனை செய்து வந்தது.

ஆனால், கார் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாததால், இரு நிறுவனங்களுக்கு இடையிலான உறவு முறிந்தது.

இந்த நிலையில், உலகின் அதிவேகமாக வளரும் கார் மார்க்கெட்டாக உருவெடுத்துள்ள இந்திய சந்தையில் மீண்டும் நுழைய பியூஜியட் முடிவு செய்துள்ளது.

இதற்காக, குஜராத்தில் ரூ.4,000 கோடி முதலீட்டில் புதிய கார் ஆலை கட்டவும் திட்டமிட்டுள்ளது. பியூஜியட் கார் ஆலைக்காக சனந்த் பகுதியில் 400 ஏக்கர் நிலத்தை குஜராத் அரசு ஒதுக்கி தந்துள்ளது.

வரும் 2014ம் ஆண்டு இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, முன்கூட்டியே இந்தியாவில் தனது வர்த்தகத்தை துவங்க பியூஜியட் முடிவு செய்திருக்கிறது.

அடுத்த ஆண்டு தனது 508 பிரிமியம் செடான் காரை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது பியூஜியட். இதற்காக, நாடு முழுவதும் டீலர்களை நியமிக்கும் பணிகளும் அடுத்த ஆண்டு பியூஜியட் துவங்குகிறது.

பியூஜியட் அறிமுகம் செய்யும் 508 செடான் கார் ஹோண்டா அக்கார்டு மற்றும் வோக்ஸ்வேகன் பஸாத் ஆகிய கார்களுக்க போட்டியாக வரும் என்று தெரிகிறது. மேலும், இந்த கார் ரூ.18 லட்சம் முதல் ரூ.20 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது.

இதனிடையே, டெல்லி ஆட்டோ கண்காட்சியில் 3 கார் மாடல்களை காட்சிக்கு வைக்கவும் பியூஜியட் முடிவு செய்துள்ளது.

Most Read Articles
English summary
French car maker peugeot to launch 508 premium sedan in India by next year. The 508 sedan will give competition to Honda Accord and Volkswagen Passat and it will priced around Rs.18 lakhs to Rs.20 lakh.
Story first published: Tuesday, December 20, 2011, 11:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X