ரூ.1.81 லட்சம் விலையில் சிறிய டிராக்டர்:மஹிந்திரா அறிமுகம்

Mahindra Yuvraj 215
டெல்லி: சிறு விவசாயிகளுக்கு ஏற்ற வகையில், ரூ.1.81 லட்சம் விலையில் சிறிய ரக டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது மஹிந்திரா நிறுவனம்.

விவசாய கருவிகள் மற்றும் டிராக்டர் தயாரிப்பில் நாட்டின் முன்னோடி நிறுவனமாக மஹிந்திரா திகழ்கிறது. விவசாயிகளுக்கு ஏற்ற வகையில், பல்வேறு திறன் எஞ்சின் கொண்ட டிராக்டர் மாடல்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது மஹிந்திரா.

ஆனால், நிலக்கிழார்கள் மட்டுமே டிராக்டர்கள் வைத்து விவசாயம் செய்யும் நிலை பரவலாக காணப்படுகிறது. இந்த நிலையில், சிறு விவசாயிகளும் டிராக்டர் வைத்து விவசாயம் செய்யும் வகையில், 15 எச்பி திறன்கொண்ட யுவராஜ் 215 என்ற சிறிய ரக டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளது மஹிந்திரா.

குஜராத் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த சிறிய டிராக்டர் சமீபத்தில் மஹாராஷ்டிராவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிய டிராக்டர் அறிமுகம் குறித்து சிறப்பு திட்டப் பிரிவுக்கான பொது மேலாளர் சுதிர் ஷா கூறியதாவது:

"யுவராஜ் 215 என்ற சிறிய டிராக்டர் விவசாயிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மணிக்கு 25.6 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த டிராக்டர் 1.5 டன் இழுவை திறன் கொண்டது. சிறு விவசாயிகள் உற்பத்தியை பெருக்குவதற்கு இந்த டிராக்டர் நிச்சயம் உறுதுணையாக இருக்கும்.

விவசாய துறையை புதிய பரிமாணத்தில் எடுத்து செல்லும் திட்டங்களுக்கு மஹிந்திரா தொடர்ந்து முன்னுரிமை கொடுக்கும். குஜராத்திலுள்ள ராஜ்கோட் தொழிற்சாலையில் ஆண்டுக்கு 16,000 யுவராஜ் 215 டிராக்டர்கள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.

Most Read Articles
English summary
Mahindra launched its 15 HP tractor Yuvraj 215, priced at Rs 1,81,000. “With the launch of Yuvraj tractor, we expect to see a change in the dynamics of the agriculture community. Yuvraj enables the small farmer to own a tractor and benefit from mechanisation, thus helping him boost his productivity,” M&M General Manager Special Projects Mr Sudhir Shah,said.
Story first published: Friday, April 22, 2011, 14:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X