குளுகுளு வசதியுடன் புதிய டிராக்டர்: மஹிந்திரா அறிமுகம்

Mahindra Ac Tractor
ரூ.15 லட்சம் விலையில் கேபினில் ஏசி வசதிகொண்ட புதிய டிராக்டரை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

வேளாண் கருவிகள் மற்றும் டிராக்டர் தயாரிப்பில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக மஹிந்திரா திகழ்கிறது.

விவசாயத்திற்கும்,விவசாயிகளின் நலனுக்கும் ஏற்ற வகையில் புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட வேளாண் கருவிகளை அறிமுகப்படுத்துவதில் மஹிந்திரா முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், அலுப்பில்லாமல் விவசாயப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஏசி வசதிகொண்ட கேபினுடன் புதிய டிராக்டரை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது.

லூதியானாவில் பஞ்சாப் வேளாண் பல்கலைகழகம் ஏற்பாடு செய்திருந்த கிசான் மேளாவில் இந்த புதிய டிராக்டரை மஹிந்திரா காட்சிக்கு வைத்துள்ளது.

குளுகுளு வசதிகொண்ட இந்த புதிய டிராக்டர் குறித்து மஹிந்திரா வேளாண் கருவிகள் விற்பனைப் பிரிவு தலைமை அதிகாரி பிஸ்வாம்பர் மிஸ்ரா கூறியதாவது:

"நாட்டிலேயே முதன்முறையாக ஏசி வசதிகொண்ட கேபினுடன் புதிய டிராக்டரை அறிமுகம் செய்துள்ளோம். அர்ஜூன் இன்டர்நேஷனல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டிராக்டர் 85 பிஎச்பி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

சாதாரண ரகத்தை சேர்ந்த 60 பிஎச்பி திறன் கொண்ட டிராக்டர்கள் ரூ.7 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஏசி வசதிகொண்ட இந்த புதிய டிராக்டர் ரூ.15 லட்சத்தில் விற்பனை செய்ய இருக்கிறோம்," என்றார்.

Most Read Articles

English summary
Mahindra showcased of its first aircontioned cabin tractor in kishan Mela at Ludiana. It is equipped with 85 bhp Engine and priced at Rs.15 lakhs.
Story first published: Friday, September 23, 2011, 12:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X