எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பம்: டெய்ம்லர்- போஸ்ச் ஒப்பந்தம்

Daimler Electric Car Prototype
எலக்ட்ரிக் கார்களுக்கான தொழில்நுட்பங்களை வடிவமைப்பதற்காக, டெய்ம்லர் மற்றும் போஸ்ச் நிறுவனங்கள் இணைந்து கூட்டுகுழுமத்தை உருவாக்க உள்ளன.

ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் நிறுவனம் கனரக வாகனங்கள் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டில் சொகுசு கார்களை தயாரிப்பதில் புகழ்பெற்று விளங்குகிறது. இதேபோன்று, ஜெர்மனியை சேர்ந்த மற்றுறொரு நிறுவனமான போஸ்ச் வாகனங்களு்க்கான உதிரிபாகங்கள் தயாரிப்பதில் சிறந்து விளங்குகிறது.

இந்த இரு நிறுவனங்களும் இணைந்து கார்களுக்கான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் வகையில், கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்ததின்படி, கார்களுக்கான புதிய தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்ள வழி ஏற்படுத்திக்கொண்டன. மேலும், இந்த ஒப்பந்தத்தின்படி உருவாக்கப்படும் புதிய தொழில்நுட்பங்கள் அடுத்த ஆண்டு முதல் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் பயன்படுத்திக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஒத்துழைப்பை மேலும் விரிவாக்கிக்கொள்வதற்கு டெய்ம்லர்- போஸ்ச் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன்படி, எலக்ட்ரிக் கார்களுக்கான லித்தியம் அயான் பேட்டரி மற்றும் மோட்டார்களை தயாரிக்கும் வகையில் புதிய கூட்டுக்குழுமத்தை உருவாக்க இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன.

இவி- மோட்டிவ் என்ற பெயரில் உருவாக்கப்பட உள்ள இந்த நிறுவனம் எலக்ட்ரி்க கார்களுக்கான பேட்டரி மற்றும் மோட்டார்களை வடிவமைத்து, தயாரிக்கவும் பணிகளில் ஈடுபட உள்ளது. தவிர, விற்பனையையும் இவி- மோட்டிவ் கவனித்துக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவி- மோட்டிவ் தயாரிக்கும் எலக்ட்ரிக் மோட்டார்கள் டெய்ம்லர் மற்றும் போஸ்ச் நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இவி- மோட்டிவ் வழங்கும் எலக்ட்ரிக் மோட்டார்களை, தனது மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டு எலக்ட்ரிக் கார்களில் டெய்ம்லர் பயன்படுத்திக்கொள்ளும். அதேவேளை, இவி- மோட்டிவ் வழங்கும் எலக்ட்ரிக் கார்களுக்கான மோட்டார்களை, போஸ்ச் நிறுவனம் பிற நிறுவனங்களிடம் விற்பனை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2020ம் ஆண்டில் 10 லட்சம் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இவி- மோட்டிவ் வளர்ச்சி பெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
English summary
The German auto manufacturer Daimler and one of the biggest auto electronics supplier Robert Bosch GmbH also from Germany have established a joint venture last year and will move forward in a technology-sharing pact that will have them jointly develop EV technology. It was also reported that the joint venture will operate as EM-motive GmbH and will be responsible for the development, production and sale of traction motors for EVs. The venture will operate from two sites at Hildesheim and Stuttgart and employ a workforce of about 100 staff. EM-motive will supply electric motors to both Daimler and Bosch, while Bosch will handle sales to third party customers. The venture seeks to produce more than one million electric motors by 2020, it was reported.
Story first published: Saturday, July 16, 2011, 17:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X