ரூ.300 கோடி முதலீட்டில் புதிய டிராக்டர் தொழிற்சாலை: எஸ்கார்ட்ஸ்

Escorts Logo
அகமதாபாத்: ரூ.300 கோடி முதலீட்டில் புதிய டிராக்டர் தொழிற்சாலை அமைக்க எஸ்கார்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம், அதற்கான இடம் குறித்த தகவல்களை வெளியிடவில்லை.

இதுகுறித்து எஸ்கார்ட்ஸ் தலைமை செயல் அதிகாரி ரோத்தாஸ் மால் கூறியதாவது:

" மார்க்கெட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப எங்களது உற்பத்தியை அதிகரித்து கொள்வது அவசியம். குறிப்பாக, குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திர மாநிலங்களில் டிராக்டர்களுக்கு கிராக்கி அதிகமாக உள்ளது.

எனவே, அங்கு விற்பனைக்கு தக்கவாறு உற்பத்தியை பெருக்கும் வகையில் புதிய டிராக்டர் தொழிற்சாலை கட்ட தீர்மானித்துள்ளோம்.

இந்த புதிய டிராக்டர் தொழிற்சாலைக்கு ரூ.300 கோடி வரை முதலீடு செய்ய இருக்கிறோம்.

குஜராத்தில் புதிய தொழிற்சாலை அமைக்கும் எண்ணம் உள்ளது. ஆனால், அங்கு தொழிற்சாலை கட்டுவதற்கான செலவீனங்கள் கூடுதலாக இருப்பதால், அதுகுறித்து பரிசீலித்து வருகிறோம்," என்றார்.

Most Read Articles

English summary
Tractor manufacturer Escorts said it will invest Rs 300 crore to set up a new tractor manufacturing facility at an undisclosed location.
Story first published: Tuesday, June 28, 2011, 15:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X