ஜெனரல் மோட்டார்ஸின் எலக்ட்ரிக் கார் அறிமுகம்:பார்க்கிங் பிரச்சினைக்கு 'குட்பை'

GE's EN-V Electric Car
லாஸ்வேகாஸ்: சுற்றுச்சூழலுக்கு உகந்த, புதிய அம்சங்களுடன் கூடிய இஎன்-வி என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் காரை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

எரிபொருள் பயன்பாட்டை குறைக்கவும்,போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் எளிதாக செல்லவும், பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.ஆனால்,குறைந்த தூரத்திற்கு மட்டுமே செல்ல முடியும் என்பதால், எலக்ட்ரிக் கார்கள் போதிய வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில்,போக்குவரத்து நெரிசலுக்கும்,பார்க்கிங் தொல்லைக்கும் விடை கொடுக்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் காரை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடந்த இந்த விழாவில் பேசிய ஜெனரல் மோட்டார்ஸ் இயக்குனர் கூறியதாவது:

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல்,குறைந்த மின்சாரத்தில் இயங்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேட்டரியை ஓரு முறை சார்ஜ் செய்தால் 40 கி.மீ., பயணம் செய்யலாம்.

இரண்டு பேர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரில்,அதிகபட்சம் 25 கி.மீ., வேகத்தில் செல்ல முடியும்.குறைந்த இட வசதி கொண்ட இடத்திலும் இந்த காரை எளிதாக பார்க்கிங் செய்யலாம். இதேபோன்று,அடுத்த முயற்சியாக எலக்ட்ரிக் பைக்குகளை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

இந்த புதிய எலக்ட்ரிக் காரின் வர்த்தக ரீதியிலான விற்பனையை துவங்குவது குறித்து ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

Most Read Articles
English summary
GM unveiled electric car recently at theLas Vegas Convention Centre. which is designed to run on battery power upto 25 miles on a single charge at a top speed of 25 mph. GM’s Director said that this electric car would fetch the most after sought vehicle status and growing business to the company. It is to be deemed as the next step to a bike as it will be affordable with less price giving easy move in the roads. Normally electric cars are preferred for short distance ride and crowded traffic roads.GM has not revealed the official launch of this EN-V for the commercial sale.
Story first published: Wednesday, January 19, 2011, 16:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X