உதிரிபாக சப்ளை பாதிப்பு: சிட்டி, பிரியோ உற்பத்தியை நிறுத்தும் ஹோண்டா

Honda Brio
தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உதிரிபாகங்கள் சப்ளை முற்றிலும் முடங்கியுள்ளதால், சிட்டி மற்றும் பிரியோ காரின் உற்பத்தியை நிறுத்தி வைக்க ஹோண்டா முடிவு செய்துள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் கார் உற்பத்திக்கான பெரும்பாலான முக்கிய உதிரிபாகங்கள் தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சமீபத்தில் தாய்லாந்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் ஹோண்டாவுக்கு உதிரிபாகங்கள் சப்ளை முற்றிலும் முடங்கியுள்ளது.

இதனால், இந்தியாவிலுள்ள ஹோண்டா ஆலையில் கார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உதிரிபாகங்கள் சப்ளை தடைபட்டதால் ஜாஸ் ஹேட்ச்பேக் காருக்கான புக்கிங்கை ஹோண்டா ஏற்கனவே நிறுத்திவிட்டது.

இந்த நிலையில், உதிரிபாகங்கள் சப்ளை உடனடியாக சரியாகும் சூழ்நிலை இல்லாததால், சிட்டி மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிரியோ கார்களின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

மேலும், சீனா மற்றும் ஜப்பானிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் ஹோண்டா எடுத்து வருகிறது.

இந்த நிலையில், கார்களை புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கார் டெலிவிரி தாமதமாகும் என்பது குறித்து தகவல் தெரிவித்து வருவதாகவும் ஹோண்டா தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Japanese Car maker Honda to shut down the City and Brio production due to supply constrains.
Story first published: Friday, November 25, 2011, 10:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X