புதிய சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் கார்களை அறிமுகப்படுத்த மாருதி திட்டம்

Maruti Alto
சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில் புதிய சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் கார் மாடல்களை அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளது.

பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் கார் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. இதையடுத்து, டீசல் மற்றும் சிஎன்ஜியில் செல்லும் கார் மாடல்களை அறிமுகப்படுத்துவதில் அனைத்து நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன.

நாட்டின் முன்னணி கார் நிறுவனமான மாருதியும் கார் விற்பனையை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாருதி வசம் டீசல் கார் மாடல்கள் இருந்தாலும் சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்கும் வகையில் சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரி ஹைபிரிட் கார்களை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.

இதுகுறித்து மாருதி தலைவர் ஆர்.சி.பர்கவா கூறுகையில்,"மாருதியின் சிஎன்ஜி கார்களுக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, புதிய சிஎன்ஜி மற்றும் ஹைபிரி்ட் கார் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

தற்போது மாருதி நிறுவனம் ஆல்ட்டோ, ஸென் எஸ்டீலோ, வேகன்-ஆர், ஈக்கோ மற்றும் எஸ்எக்ஸ்-4 ஆகிய 5 கார்களில் சிஎன்ஜி மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

பெட்ரோலைவிட சிஎன்ஜி கியாஸ் விலை குறைவு என்பதால் மார்க்கெட்டில் மாருதி சிஎன்ஜி மாடல் கார்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இருப்பினும், டெல்லி, மும்பை மற்றும் குஜராத்தில் மட்டுமே கார்களுக்கான சிஎன்ஜி கியாஸ் கிடைக்கிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் சிஎன்ஜி சப்ளை செய்யும் பங்குகளை விரிவுப்படுத்தி தர மத்திய அரசு உதவ வேண்டும் என்று மாருதி கேட்டுக்கொண்டுள்ளது. இதுதவிர, கடந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளின்போது ஹைபிரிட் எஸ்எக்ஸ்-4 கார் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.

சோதனையின்போது ஹைபிரிட் எஸ்எக்ஸ்-4 கார் 25 சதவீதம் கூடுதல் மைலேஜ் கொடுத்ததாக மாருதி தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மார்க்கெட் பங்களிப்பை தக்க வைத்துக்கொள்ள கூடுதல் சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் கார்களை அடுத்தடுத்து களமிறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki, India's leading carmaker is keen to reduce its carbon imprint an is planning to increase the number of its CNG powered models and also launch hybrid cars in India. The carmaker currently has five models with CNG engines. It believes the use of alternate fuels is eco friendly.
Story first published: Monday, November 21, 2011, 14:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X