சென்னை ஆலையில் அடுத்த ஆண்டு டயர் உற்பத்தி: மிச்செலின்

Michelin Tyres
சென்னை: சென்னை அருகே அமைக்கப்பட்டு வரும் புதிய தொழிற்சாலையில் அடுத்த ஆண்டு நவம்பரில் டயர் உற்பத்தி துவங்கப்பட உள்ளதாக மிச்செலின் டயர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டயர் தயாரிப்பில் மிகப்பெரிய சர்வதேச நிறுவனமான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மிச்செலின், திருவள்ளூர் மாவட்டம் கண்டிகை தொழிற்பேட்டையில், ரூ.4,000 கோடி முதலீட்டில் பிரம்மாண்ட டயர் தொழிற்சாலையை அமைத்து வருகிறது.

290 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் இந்த தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நவம்பரில் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி துவங்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மிச்செலின் நிறுவனத்தின் தலைவர் நிக்கோலஸ் பீமவுண்ட் கூறியதாவது:

"உலகில் 18 நாடுகளில் எங்களுக்கு 70 டயர் தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால், சென்னையில் அமைக்கப்பட்டு வரும் தொழிற்சாலைதான் இவற்றில் மிகப்பெரியதாக இருக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையின் முதற்கட்ட கட்டுமான பணிகள் முடிந்தவுடன், அடுத்த ஆண்டு நவம்பரில் டயர் உற்பத்தியை துவங்க திட்டமிட்டுள்ளோம்.

முதலில் ஆண்டுக்கு 3 லட்சம் டிரக் ரேடியல் டயர்களை உற்பத்தி செய்ய உள்ளோம். இந்த டயர்கள் முழுவதும் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்ய இருக்கிறோம்.

படிப்படியாக தொழிற்சாலையின் உற்பத்தியை விரிவாக்கம் செய்த பின் ஆண்டுக்கு 2 மில்லியன் கார் மற்றும் டிரக்குகளு்க்கான ரேடியல் டயர்கள் இங்கு தயாரிக்கப்படும்," என்றார்.

Most Read Articles

English summary
French-tyre major Michelin Tyres plans to roll out its first tyre from the Rs 4,000-crore facility being built near Chennai, in November 2012. According to report , Michelin stated that this facility will become the largest among the group's factories in the world. The report quoted Nicloas Beaumont, president and managing director, Michein India Tamil Nadu Tyres Pvt Ltd as saying that this will be the largest plant inside the group. Currently, the group has 70 product plants across 18 countries,” he said.
Story first published: Saturday, July 9, 2011, 11:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X