ரூ,4000 கோடி கார் ஆலைக்கு அடிக்கல் நாட்டியது பியூஜியட்

Peugeot Poomi Pooja
குஜராத் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டையில் பிரான்சை சேர்ந்த பியூஜியட் நிறுவனத்தின் புதிய கார் ஆலைக்கு நேற்று அடிக்கல் நாட்டி பூமி பூஜைகள் நடத்தப்பட்டன. அடுத்த 3 ஆண்டுகளில் இந்த ஆலை கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பியூஜியட் போர்டு உறுப்பினர் கிரிகோரி ஒலிவர், டைரக்டர் ஜெனரல் வின்சென்ட் ராம்பவுட், நிர்வாக இயக்குனர் பிரடெரிக் பேப்ரி ஆகியோர் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறுகையில்,"உலகின் ஆட்டோமொபைல் கேந்திரமாக குஜராத் மாறி வருகிறது. புதிய ஆலை கட்டும் பியூஜியட் நிறுவனத்துக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார்.

அடுத்த சில வாரங்களில் இந்த புதிய ஆலைக்கான கட்டுமானப் பணிகள் துவங்க உள்ளன. இந்த புதிய தொழிற்சாலை 600 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட இருக்கிறது. மேலும், இந்த ஆலை வளாகத்திலேயே உதிரிபாகங்கள் சப்ளையர்களின் தொழிற்சாலைகளும் அமைய உள்ளன.

இந்த புதிய தொழிற்சாலை மூலம் அங்கு சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் கார் உற்பத்தி நிறுவனங்களில் வோக்ஸ்வேகனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கார் நிறுவனம் பியூஜியட் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Peugeot, the French car major began its Indian operations by conducting a ground breaking ceremony for its new plant in Sanand, Gujarat. The plant will be the carmaker's first plant in India and it is expected to be completed within the next three years.Mr. Grégoire Olivier, Member of the Managing Board PSA Peugeot Citroën and CEO of Asian Operations, Mr. Vincent Rambaud, Director General of Peugeot and Mr. Frédéric Fabre, Managing Director of PCA Motors India performed the bhoomi poojan and the ground-breaking ceremony.On this occasion Gujarat chief minister Narendra Modi said: “Gujarat is emerging as a Global auto hub. I congratulate Peugeot to be part of it. I take this opportunity to reiterate and reassure you of the longstanding commitment and dedication that we devote to this project.”
Story first published: Friday, November 4, 2011, 12:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X