விரைவில் ரிமோட் கன்ட்ரோல் டிராக்டர் அறிமுகம்: சோனாலிகா

Sonalika Tractor
மும்பை: நிழலில் ஹாயாக உட்கார்ந்துகொண்டு, நிலத்தை உழுவதற்கு ஏதுவாக ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் டிராக்டரை சோனாலிகா விரைவில் அறிமுகப்படுத்துகிறது.

இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட டிராக்டரில், உட்கார்ந்துகொண்டு ஓட்டவேண்டிய அவசி்யம் இல்லை.

மொபைல்போன் அல்லது ரிமோட் கன்ட்ரோல் மூலம் டிராக்டரை இயக்கவும், நிலத்தை ஆழ உழுவதற்கான வசதிகளையும் பெற முடியும்.

சேறு, சகதிகளில் டிராக்டரை ஓட்டும்போது ஏற்படு்ம் உடல்பாதிப்புகளிலிருந்து விவசாயிகளுக்கு விடுதலை கிடைக்கும் வகையில் இந்த புதிய டிராக்டரை சோனாலிகா வடிவமைத்து வருகிறது.

அடுத்த ஆறு மாதங்களில் இந்த புதிய டிராக்டர் சந்தைக்கு வரும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சோனாலிகா குழும தலைவர் எல்.டி. மிட்டல் கூறியதாவது:

"டிராக்டரை கொண்டு உழவுப்பணிகள் மேற்கொள்ளும்போது விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.

சேறு, கடுமையான தட்பவெப்பம் போன்றவற்றால் அவர்களது உடல்நிலை பாதிக்கப்படுகிறது.

இதைக்கருத்தில்கொண்டு, வயலில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு, ரிமோட் கன்ட்ரோல் அல்லது மொபைல்போன் மூலம் டிராக்டரை இயக்கி உழவுப்பணிகளை செய்யும் வகையில் புதிய டிராக்டரை வடிவமைத்து வருகிறோம்.

அடுத்த ஆறு மாதத்தில் இந்த டிராக்டர் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த புதிய டிராக்டர் விவசாய கருவிகள் தயாரிப்பு துறையில் புதிய அத்தியாத்தை ஏற்படுத்தும்," என்று கூறினார்.

Most Read Articles

English summary
Sonalika Group, has come up with a new tractor model that can be controlled via remote.For use in the fields on days of rough weather such as extreme heat, cold or rains, this model is expected to be in the market in the next six months. It will be manufactured by the Group's flagship company, International Tractors Ltd (ITL).The farmer can sit under the shade at a distance and control the tractor through a separate device or his mobile phone," says Sonalika group higher official.
Story first published: Saturday, July 16, 2011, 9:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X