விற்பனை மந்தம்: நானோ கார் உற்பத்தி பாதியாக குறைப்பு

Tata Nano
விற்பனை மந்தமாக இருப்பதால் நானோ கார் உற்பத்தியை பாதியாக குறைத்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

பல்வேறு காரணங்களால் நானோ கார் விற்பனை எதிர்பார்த்தபடி அமையவில்லை. நானோ கார் விற்பனையை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் தீவிர முயற்சிகள் மேற்கொண்டும் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை.

இந்த நிலையில், கூடுதல் வசதிகள் மற்றும் அம்சங்களுடன் புதிய நானோ கார் கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பழைய விலையிலேய புதிய நானோ மாடல் வந்துள்ளதால் விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டும் என்று பரவலாக கருத்து எழுந்துள்ளது.

இந்த நிலையில், நானோ கார் உற்பத்தி செய்யப்படும் சனந்த் ஆலையில் உற்பத்தி 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும்.

ஆனால், தற்போது மாதத்திற்கு 10,000 நானோ கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதால், ஆண்டுக்கு 1.20 லட்சம் கார்கள் என்ற மட்டுமே உற்பத்தி செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோல்கட்டாவில் நடந்த தங்க நானோ கார் அறிமுக விழாவில், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் இந்த தகவலை தெரிவித்தார்.

இந்த நிலையில், சன்ந்த தொழிற்சாலையில் வேறு கார் மாடல்களை உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இண்டிகா ஹேட்ச்பேக் கார் உற்பத்தியை சனந்த் ஆலையில் துவங்க டாடா திட்டமிட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Tata Motors might appear to be on a high after launching the new 2012 Tata Nano but the sales scenario does not seem to be very great. The Indian carmaker has in fact producing just 50 per cent of the total plant cappacity so far.The Tata Nano's plant in Sanand Gujarat had a production capacity of 2.5 lakh units per year and Tata Motors has so far built just about 10,000 units per month. This translates to about 1.2 lakh units per year. This discrepancy in production capacity and actual production of the Nano is due to the lukewarm sales in recent months.
Story first published: Thursday, November 24, 2011, 14:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X