லெக்ஸஸ் சொகுசு கார்களை அறிமுகப்படுத்தும் டொயோட்டோ

Lexus I SC Convertible
அமெரிக்காவில் பிரபலமான தனது லெக்ஸஸ் பிராண்டு சொகுசு கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதாக டொயோட்டோ அறிவித்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ கார் நிறுவனம், லெக்ஸஸ் பிராண்டில் சொகுசு கார்களை விற்பனை செய்து வருகிறது. டொயோட்டோ தாய் நிறுவனமாக இருந்தாலும், லெக்ஸஸ் பிராண்டு தனியாகவே செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக, அமெரிக்காவில் லெக்ஸஸ் பிராண்டு கார்கள் மிகவும் பிரபலமாக திகழ்கின்றன. இந்த நிலையில், இந்தியாவில் பிரிமியம் என்று கூறப்படும் சொகுசு கார்களுக்கான மார்க்கெட் வேகமாக வளர்ந்து வருகிறது.

சிறிய கார் மார்க்கெட் விற்பனை குறைந்தபோதிலும், சொகுசு கார்களின் விற்பனை சீராக வளர்ந்து வருகிறது. இதைக்கருத்தில்க்கொண்டு, தனது லெக்ஸஸ் பிராண்டு பிரிமியம் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய டொயோட்டோ கார்ப்பரேஷன் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து டொயோட்டோ நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு துணை நிர்வாக இயக்குனர் சந்தீப் சிங் கூறுகையில்,"டொயோட்டோவின் தனி மதிப்புமிக்க பிரிமியம் பிராண்டாக லெக்ஸஸ் திகழ்கிறது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் லெக்ஸஸ் பிராண்டு பிரிமியம் கார்களை வரும் 2013ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

லெக்ஸஸ் பிராண்டு கார்கள் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, லெக்ஸஸ் பிராண்டுக்காக தனியாக திறக்கப்படும் ஷோரூம்கள் மூலம் விற்பனை செய்யப்படும்," என்றார்.

Most Read Articles

English summary
Japanese auto giant Toyota Motor corporation to launch its Lexus premium cars in India by 2013. The Lexus brand cars will be imported from Japan via CBU route. 
Story first published: Tuesday, November 29, 2011, 12:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X