குட்டிக் கார் தயாரிக்கும் திட்டம் இல்லை: லேலன்ட் விளக்கம்

கார் தயாரிக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று அசோக் லேலன்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் இரண்டாவது பெரிய கனரக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலன்ட் ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனத்துடன் இணைந்து சிறிய ரக வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. தோஸ்ட் என்ற பெயரில் மினி டிரக்கை விற்பனை செய்து வரும் லேலன்ட், விரைவில் ஸ்டைல் என்ற பெயரில் புதிய மினி வேனையும் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த நிலையில், கடந்த மாதம் ஜெனிவா ஆட்டோ எக்ஸ்போவில் அசோக் லேலன்ட்டுடன் இணைந்து சிறிய காரை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக நிசான் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. வரும் 2014ம் ஆண்டில் இந்த கார் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த தகவல்களை அசோக் லேலன்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வினோத் தாசரி திட்டவட்டமாக மறுத்துள்ளார். தற்போது வர்த்தக வாகன தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், லேலன்ட்டுடன் இணைந்து சிறிய கார் தயாரிக்கப்போவதாக நிசான் தெரிவித்திருந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Country's second largest heavy vehicle maker Ashok leyland denies it won't enter car segment. The company chief clarifies regarding this matter yesterday, it will only focus on the commercial segment.
 
 
Story first published: Friday, April 20, 2012, 10:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X