நேபாளத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் சர்வாதிகாரி ஹிட்லர் கார்

Hitler Benz Car
உலகையே ஆட்டிப்படைத்த சர்வாதிகாரி ஹிட்லர் வைத்திருந்த கார் தற்போது நேபாளத்தில் உள்ள ஒரு எஞ்சினியரிங் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் அந்த காரை சரிசெய்து மீண்டும் கொண்டு வருவதற்கான நிதி தங்களிடம் இல்லை என்று அந்த கல்லூரி நிர்வாகம் கைவிரித்துள்ளது.

ஹிட்லரை குறிப்பிடாமல் உலக வரலாறை எழுத முடியாது. தனது மூர்க்கமான சர்வாதிகார போக்கால் உலகையே ஆட்டிபடைத்த அவர் மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்றை பயன்படுத்தி வந்தார். பின்னர் அந்த காரை கடந்த 1939ம் ஆண்டு நேபாள மன்னர் திருபுவனுக்கு பரிசாக கொடுத்தார்.

இந்த நிலையில், அந்த கார் தற்போது நேபாளத் தலைநகர் காத்மாண்டில் உள்ள ஒரு எஞ்சினியரிங் கல்லூரியில் இருக்கிறது. சரியான பராமரிப்பு இல்லாமல் இத்து போன நிலையில் இருக்கும் அந்த கார் மாணவர்களுக்கு செயல் விளக்கம் காண்பிப்பதற்காக தற்போது பயன்படுத்த வருகிறது.

அந்த காரை சரிசெய்ய பல்வேறு தரப்பிலிருந்தும் கல்லூரி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அந்த காருக்கான பாகங்களை ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்து பொருத்த வேண்டும் என்பதால் அதிக செலவாகும் என்றும், அதற்கு போதிய நிதி தங்களிடம் இல்லை என்று அந்த கல்லூரி நிர்வாகம் கைவிரித்துள்ளது.

இந்த நிலையில், வரலாற்று சிறப்புமிக்க அந்த காரை மீண்டும் சரிசெய்து அங்கு கட்டப்பட்டு வரும் புதிய அருங்காட்சியகத்தில் வைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Vintage cars are loved by all not only for the beauty, longevity and classic looks but also their history. Many vintage cars have been valued at millions of dollars just because of the people the cars were associated with. A Vintage 1939 Mercedes-Benz that was gifted to the then King of Nepal, King Tribhuvan by German Dictator Adolf Hitler will soon be on display at the royal museum being built in Katmandu.
Story first published: Wednesday, March 21, 2012, 10:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X