சரிவான பாதையில் சமர்த்தாக கார் ஓட்ட உதவும் 'ஹில் அசிஸ்ட்'

Hill Assist Technology
மலைப்பாதைகளில் கார் ஓட்டும்போது மிக கவனமாக ஓட்ட வேண்டியது அவசியம். என்னதான் அனுபவமிக்க டிரைவராக இருந்தாலும் மலைப்பாதைகளில் கார் ஓட்டுவது சவாலான காரியமே.

மலைப்பாதைகளிலும், சரிவான சாலைகளிலும் ஏறும்போதும், இறங்கும்போதும் ஏதோ ஒரு காரணத்திற்காக காரை நிறுத்தி மீண்டும் கிளப்பும்போது கார் பின்னோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பிரேக்கிலிருந்து காலை எடுத்து கிளட்ச் பெடலுக்கு மாற்றும்போது, பிரேக் ரிலீசாகி விடுவதால் கார் சட்டென்று பின்னோக்கி செல்லும் நிலை ஏற்படும்.

ஆனால், உடனடியாக கிளட்ச் கன்ட்ரோலை பிடித்து ஆக்சிலேட்டரை அழுத்தினால்தான் முன்னோக்கி செல்ல முடியும். இதெல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நம் கால்கள் செய்ய வேண்டும். ஹேண்ட் பிரேக்கும் இதற்கு உதவாது.

இந்த நிலையில், மலைப்பாதையில் பின்னால் ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் அணிவகுத்து செல்லும்போது பின்னால் வரும் வாகனங்களுடன் மோதும் ஆபத்தும் இருக்கிறது.

இந்த ஆபத்தை தடுக்க வல்ல புதிய தொழில்நுட்பமே ஹில் அசிஸ்ட். ஹில் அசிஸ்ட் தொழில்நுட்ப வசதி கொண்ட கார்களில் சரிவான சாலையில் நிறுத்தி விட்டு மீண்டும் எடுக்கும்போது டிரைவர் பிரேக்கிலிருந்து காரை எடுத்தாலும், 2.5 வினாடிகளுக்கு காரின் பிரேக்கை ஹில் அசிஸ்ட் பிடித்து வைத்திருக்கும்.

பின்னர் கிளட்ச், ஆக்சிலேட்டருக்கு கால் சென்று அழுத்தும்போது பிரேக்கை தானாக ரீலிஸ் செய்துவிடும் இந்த ஹில் அசிஸ்ட். இந்த தொழில்நுட்பம் 2 சென்சார்கள் உதவியுடன் செயல்படுகிறது.

இந்த ஹில் அசிஸ்ட் தொழில்நுட்பம் குறிப்பாக ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார்களுக்கு மிகவும் அவசியம். ஏனெனில், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார்களில் கிளட்ச் இருக்காது என்பதால், பிரேக் மற்றும் ஆக்சிலேட்டர் துணையுடன் மட்டுமே செல்ல முடியும்.

மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட கார்களைவிட ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார்களுக்கு ஹில் அசிஸ்ட் வரப்பிரசாதமாக கூறலாம்.

சரிவான பாதையில் இறங்கும்போதும், நிறுத்தி எடு்க்கும்போது இந்த புதிய தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும்.

Most Read Articles
English summary
Now a days cars are comes with more advanced technology. Hill assist technology, which makes navigating hilly terrain effortless, allowing drivers to get started without rolling backward or forward. This convenient feature offers an “extra foot” to manual transmission models to help novice and veteran stick drivers better manage hills, but we’re also seeing it more frequently on automatic cars as well.
Story first published: Wednesday, February 29, 2012, 13:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X