டிராபிக் ஜாமில் கார் ஓட்டும் புதிய தொழில்நுட்பம்: ஃபோர்டு கண்டுபிடிப்பு

Self Driving
போக்குவரத்து நெரிசலில் டிரைவர் கட்டுப்பாடு இல்லாமல் கார் ஓட்டுவதற்கான புதிய தானியங்கி தொழில்நுட்பத்தை ஃபோர்டு உருவாக்கியுள்ளது. இது நகரப்புற நெரிசலில் கார் ஓட்டி சோர்ந்து போவர்களுக்கு வரப் பிரசாதமாக அமையும் என கருதப்படுகிறது.

போக்குவரத்து நெரிசலில் கார் ஓட்டும்போதும் அதிக மன அழுத்தமும், உடல் சோர்வும் ஏற்படுகிறது. மேலும், இஞ்ச் இஞ்ச்சாக வாகனங்கள் ஊர்ந்து செல்லும்போது டிரைவர்கள் காரை ஓட்டும்போது மிகுந்த அவஸ்தைக்கு ஆளாகின்றனர்.

இந்த அவஸ்தைகளை தவிர்க்கும் வகையில் புதிய தானியங்கி தொழில்நுட்பத்தை ஃபோர்டு உருவாக்கியுள்ளது. டிராபிக் அஸிஸ்ட் என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய தொழில்நுட்பம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலுள்ள ஃபோர்டு வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட சோதனைகளில் வெற்றி கண்டுள்ளது.

மிகுந்த போக்குவரத்து நெரிசலில் செல்லும்போது இதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால் போதும். கார் தானியங்கி முறையில் செல்லும். காரின் ரியர் வியூ மிரரில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா மற்றும் ரேடார் உதவியுடன் போக்குவரத்து நெரிசலை கண்டறிந்து பிளாக் பாக்ஸ் என்ற கட்டுப்பாட்டு கருவி மூலம் காரின் நகர்வு கட்டுப்படுத்தப்படுகிறது.

முன்னால் மற்றும் பக்கத்தில் செல்லும் வாகனங்கள் மீது மோதிவிடாமல் அழகாக காரை நகர்த்தும். சாலைகளில் வளைவுகள் இருந்தாலும் கார் தானாக திரும்பும். மேலும், பிரேக், ஆக்சிலேட்டர் எல்லாவற்றையும் பிளாக் பாக்ஸ் கட்டுப்படுத்துகிறது. போக்குவரத்து நெரிசல் குறைந்தவுடன் 30 கிமீ வேகத்தை கார் எட்டும்போது இந்த கருவி தானாக ஆஃப் ஆகி டிரைவர் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும்.

இந்த புதிய தொழில்நுட்பம் அடுத்த 5 ஆண்டுகளில் வணிக ரீதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் பெரும்பான்மையான கார் மாடல்களில் இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Ford has developed a new technology that will allow drivers to relax in traffic jams while their car drives itself through the slow moving traffic.
Story first published: Wednesday, June 27, 2012, 12:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X