டிராபிக் ஜாம் பற்றி துல்லியமாக சொல்லும் ஹோண்டா தொழில்நுட்பம்

எந்த இடத்தில் டிராபிக் ஜாம் அதிகமாக உள்ளது என்பதை செயற்கைகோள் உதவியுடன் உடனுக்குடன் தெரிவிக்கும் புதிய தொழில்நுட்பத்தை ஹோண்டா கண்டுபிடித்துள்ளது.

நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவிட்டது. தீர்வு காண முடியாத விஷயங்களில் போக்குவரத்து நெரிசலும் ஒன்று என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Honda New Technology

இதனால், அவசரத்திற்கு கூட குறிப்பிட்ட இடத்தை சென்றவடைவது நம் கையில் இல்லை என்ற நிலை இருக்கிறது. இந்த நிலையில், டிராபிக் ஜாம் பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் கார்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை ஹோண்டாவும், டோக்கியோ பல்கலைகழக விஞ்ஞானிகளும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ள இடத்தை தவிர்த்து எந்த வழியில் செல்லலாம் எளிதாக என்பதையும் இந்த சிஸ்டம் தெரிவிக்கும் என்கிறது ஹோண்டா. இது அட்வான்ஸ்டு குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்துடன் இணைக்கும் வகையில் மேம்படுத்தப்படும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பம் முதன்முறையாக அடுத்த மாதம் இத்தாலியிலும், ஜூலையில் இந்தோனேஷியாவிலும் கார்களில் பொருத்தி நேரடி சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்யப்பட்டால், கால விரயத்தை தவிர்ப்பதோடு, எரிபொருளையும் மிச்சப்படுத்த வழி ஏற்படும் என்பது திண்ணம்.

Most Read Articles

English summary
Japanese carmaker Honda has developed a new technology that will help drivers avoid traffic jams by monitoring traffic. It will also provide drivers alternative routes through the Satnav system.
Story first published: Friday, April 27, 2012, 15:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X