எஸ்யூவி, பிக்கப் டிரக்கை அறிமுகப்படுத்தும் சீனாவின் கிரேட் வால்

Great Wall SUV
மொபைல் மார்க்கெட்டை ஆட்டிப் படைத்த கையோடு தற்போது வாகன சந்தையிலும் சீன தயாரிப்புகள் அடு்த்தடுத்து அறிமுகமாகி வருகின்றன.

சீனாவின் ஸோய்ட்டே நிறுவனத்தின் மினி எஸ்யூவியை பிரிமியர் நிறுவனம் ரியோ என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, தற்போது இன்டர்நேஷனல் குழுமத்தின் ஓர் அங்கமான சோனாலிகா நிறுவனத்தின் மூலம் சீனாவை சேர்ந்த கிரேட் வால் நிறுவனம் இந்தியாவில் அடியெடுத்து வைக்கிறது.

இன்டர்நேஷனல் குழுமம் மற்றும் கிரேட் வால் மோட்டார்ஸ் ஆகியவை கூட்டு குழுமமாக செயல்படுவதற்கு திட்டமிட்டுள்ளன. கிரேட் வால் நிறுவனத்தின் ஹவால்-5 எஸ்யூவி மற்றும் விங்கிள் பிக்கப் டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த இன்டர்நேஷனல் திட்டமிட்டுள்ளது.

இதற்காக, கிரேட் வால் நிறுவனத்தின் ஹவால்-5 எஸ்யூவி மற்றும் விங்கிள் பிக்கப் டிரக் ஆகியவை தற்போது இந்தியாவில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், விங்கிள் பிக்கப் டிரக் சிங்கிள் மற்றும் டபுள் கேபின் வசதிகளில் கிடைக்கும்.

இரண்டிலும் கிரேட் வால் நிறுவனத்தின் ஜி-ஒன் சீரிஸ் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 120 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, டாடா சஃபாரி ஸ்ட்ரோம் ஆகிய எஸ்யூவிக்களுக்கு இந்த எஸ்யூவி நேரடி போட்டியை கொடுக்கும் என்று தெரிகிறது.

உற்பத்தி நிறுத்தப்பட்ட டொயோட்டோ குவாலிஸ் போன்றே அச்சு அசலான ரைனோ என்ற எஸ்யூவியை ஏற்கனவே இன்டர்நேஷனல் குழுமம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
International motors to launch Chinese brand SUV in India soon. The ICML is planning to get into a JV with The Great Wall and sell of its vehicles. In that mean time, Great wall's Haval 5 SUV is testing in India now.
Story first published: Monday, January 23, 2012, 11:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X