லேண்ட்ரோவர் எவோக்குக்கு எக்கச்சக்க டிமான்ட்.. 24 மணிநேரமும் உற்பத்தி!

Evoque
எவோக் எஸ்யூவிக்கு இருக்கும் தேவையை கருத்தில்கொண்டு, ஹேல்வுட் ஆலையில் 24 மணிநேரமும் உற்பத்தியை கூட்டுகிறது லேண்ட்ரோவர்.

கடந்த ஜூலையில் எவோக் சொகுசு எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் லேண்ட்ரோவர் விற்பனைக்கு கொண்டு வந்தது. அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னரே பெரும் வரவேற்பை பெற்றது. 170 நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், இதுவரை 88,000 எவோக் எஸ்யூவி கார்கள் விற்பனையாகி இருக்கின்றன.

இந்த நிலையில், எவோக் எஸ்யூவிக்கு தொடர்ந்து அதிக டிமான்ட் இருக்கிறது. இதையடுத்து, இங்கிலாந்து, ஹேல்வுட் பகுதியில் உள்ள தனது ஆலையின் உற்பத்தி திறனை வெகுவாக அதிகரிக்கிறது லேண்ட்ரோவர்.

ஹேல்வுட் ஆலையில் 3 ஷிப்டுகளிலும் எவோக் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாக லேண்ட்ரோவர் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆலைக்கு புதிதாக 1000 பேரை நியமிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, புதிய பணியாளர்கள் நியமனம் நிறைவு பெற்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத்தொடர்ந்து, தற்போது 3 ஷிப்டுகளிலும் எவோக் உற்பத்தி துவங்கப்படுகிறது. லேண்ட்ரோவரின் 50 ஆண்டுகால வரலாற்றில் தற்போது முதன்முறையாக 3 ஷிப்டுகளிலும் கார் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

இதன்மூலம், எவோக் எஸ்யூவிக்கு தற்போது இருக்கும் நீண்ட காத்திருப்பு காலம் வெகுவாக குறையும். இதனால், விற்பனையும் அதிகரிக்க முடியும் என்று லேண்ட்ரோவர் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Tata owned British luxury SUV maker Land Rover has increased of its production capacity of Evoque. The company said, UK-based Halewood manufacturing facility would work 24 hours to meet strong global demand for the Range Rover Evoque.
Story first published: Wednesday, August 15, 2012, 12:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X