ஏற்றுமதியில் 1 மில்லியனை கடந்த மாருதி புதிய சாதனை

Maruti A Star
இதுவரை 10 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்து மாருதி நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.

நாட்டின் கார் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாருதி நிறுவனம் ஏற்றுமதியில் இரண்டாம் இடம் வகிக்கிறது.

உள்நாட்டு மார்க்கெட் தவிர 5 கண்டங்களில் உள்ள 125 நாடுகளுக்கு இங்கிருந்து கார் ஏற்றுமதி செய்து வருகிறது மாருதி.

இந்த நிலையில், தற்போது மாருதியின் ஏற்றுமதி புதிய மைல்கல்லை கடந்துள்ளது. ஆம், நேற்றுமுன்தினம் தனது 10 லட்சமாவது காரை மாருதி ஏற்றுமதிக்காக அனுப்பியது.

சிவப்பு நிற ஏ-ஸ்டார் கார்தான் மாருதியின் 10 லட்சமாவது ஏற்றுமதி கார். முந்த்ரா துறைமுகம் வழியாக இந்த காருடன் 2200 கார்கள் கொண்ட லாட்டை மாருதி ஏற்றுமதி செய்தது.

மாருதியின் முன்னணி ஏற்றுமதி மாடலான ஏ-ஸ்டார் கார், ஐரோப்பிய மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஏ-ஸ்டார் கார் சுஸுகி ஆல்ட்டோ மற்றும் சுஸுகி செலிரியோ என்ற பெயர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Most Read Articles
English summary
Car market leader Maruti Suzuki India Limited exported its one millionth vehicle. The glistening red colored A-star left the Mundra coast line along with 2,200 other vehicles for various international destinations including Switzerland.
Story first published: Wednesday, May 2, 2012, 8:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X