பிரிமியம் ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்த பியூஜியட் திட்டம்

Peugeot 207
குறைந்த விலையில் கார்களை களமிறக்கி மாருதியின் சிறிய கார் மார்க்கெட்டை உடைக்க பியூஜியட் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய கார் மாடல்களை குஜராத்தில் கட்டப்பட இருக்கும் புதிய ஆலையில் உற்பத்தி செய்ய உள்ளது.

பிரான்சை சேர்ந்த பியூஜியட் நிறுவனம் பிரிமியம் கார் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இந்திய கார் மார்க்கெட்டில் பியூஜியட் மீண்டும் களமிறங்க திட்டமிட்டுள்ளது. முதலில் ஆர்சிஇசட்,3008 கிராஸ்ஓவர், 508 பிரிமியம் செடான் கார் மாடல்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து, ரூ.4,500 கோடி முதலீட்டில் குஜராத்தில் கட்டப்பட இருக்கும் புதிய ஆலையில் கார்களை உற்பத்தி செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பெரிய அளவிலான வர்த்தக திட்டத்துடன் கால் பதிக்கும் பியூஜியட் மாருதியின் கோட்டையாக திகழும் சிறிய கார் மார்க்கெட்டை உடைக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக, குறைந்த விலையில் 2 புதிய கார் மாடல்களை பியூஜியட் அறிமுகப்படுத்துகிறது. ஒன்று மாருதி ஸ்விப்ட் காருக்கு போட்டியை கொடுக்கும் வகையில், பிரிமியம் ஹேட்ச்பேக் காராகவும், மற்றொன்று மிட் சைஸ் செடான் காராகவும் இருக்கும்.இதில், செடான் கார் ஃபியட் லீனியா உள்ளிட்ட கார்களுக்கு போட்டியை கொடுக்கும்.

மேலும், டீசல் எஞ்சினில் நிபுணவத்துவம் பெற்று பெயர் வாங்கியுள்ள பியூஜியட், தனது பிரிமியம் ஹேட்ச்பேக் காரில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த இரண்டு கார்களும் அந்த நிறுவனத்தின் குறைந்த விலை கார்கள் தயாரிக்கப்படும் எம் பிளாட்பார்மில் வடிவமைக்கப்படும்.

வரும் 2014ம் ஆண்டு இந்த 2 கார்களின் உற்பத்தியும் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, நிதி நெருக்கடி காரணமாக அந்த நிறுவனம் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், மும்பையில் இருந்த தனது இந்திய பிரிவு அலுவலகத்தை ஆமதாபாத் நகருக்கு மாற்றியுள்ளது.

Most Read Articles
English summary
The French Car maker Peugeot planning to launch 2 cheap car models in India to take Maruti and Hyundai small car market. The 2 new cars will be designed in of its Low cost M platform. The one model will be a premium hatchback and another one is Mid size sedan.
Story first published: Thursday, February 2, 2012, 10:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X