கூட்டத்தை கூட்டிய 'பறவை' கார்: படங்களுடன் தகவல்கள்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல டிசைனர் ஜெர்மி ஸ்காட் வித்தியாசமான கான்செப்ட் கார் ஒன்றை வடிவமைதத்துள்ளார். அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கும் இந்த கார் லாஸ் ஏஞ்சல்ஸ் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அரங்கில் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த இந்த கார் பற்றிய பிரத்யேக படங்கள் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

றெக்கை கட்டிய ஸ்மார்ட் கார்

றெக்கை கட்டிய ஸ்மார்ட் கார்

ஜெர்மனியின் பிரபல ஸ்மார்ட் பிராண்டின் எலக்ட்ரிக் காரைத்தான் இவ்வாறு றெக்கைகளை பொருத்தி வடிவமைத்துள்ளார் ஜெர்மி.

லிமிடேட் எடிசன் மாடல்

லிமிடேட் எடிசன் மாடல்

அடுத்த ஆண்டு ஜெர்மி வடிவமைத்துள்ள இந்த கார் லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட உள்ளது.

றெக்கையால் என்ன பலன்?

றெக்கையால் என்ன பலன்?

காரில் றெக்கை பொருத்தியது ஏன்? என்று நம் மனதில் எழும் கேள்விக்கு ஜெர்மி கூறும் பதில்," என்னை பொறுத்தவரை றெக்கைகளை 'சுதந்திரம்' என்று கருதுகிறேன். கார்பன் புகையிலிருந்து சுற்றுச்சூழலுக்கு சுதந்திரம் தரும் எலக்ட்ரிக் கார்கள் பக்கம் மக்களின் கவனத்தை திரும்பவே இந்த முயற்சி," என்றார்.

'வெள்ளைவெளேர்' இன்டிரியர்

'வெள்ளைவெளேர்' இன்டிரியர்

வெளிப்புறத்தில் றெக்கைகள் கவர்வது போன்று உட்புறத்தில் வெள்ளை நிற நப்பா லெதர் மற்றும் குரோம் மெட்டிரியல்களில் தயாரான பாகங்களை கொண்டு இன்டிரியர் பினிஷிங் செய்துள்ளார் ஜெர்மி.

ஓபன் டாப் ஸ்டீயரிங்

ஓபன் டாப் ஸ்டீயரிங்

ரேஸ் கார்கள் போன்று ஓபன்டாப் ஸ்டீயரிங் வீலை இந்த காரில் பொருத்தியிருக்கிறார் ஜெர்மி.

உற்பத்தி எப்போது?

உற்பத்தி எப்போது?

லாஸ் ஏஞ்சல்ஸ் ஷோவில் தற்போது கான்செப்ட் மாடலாக வைக்கப்பட்டிருக்கும் இந்த கார் அடுத்த ஆண்டு பிற்பகுதியில் உற்பத்திக்கு உகந்த நிலையை எட்டும்.

ஸ்மார்ட் பினிஷிங்

ஸ்மார்ட் பினிஷிங்

சாதாரணமாக கார்களில் கிரில், டோர் சில் உள்ளிட்ட இடங்களில் குறைந்த அளவே குரோம் பினிஷிங் செய்யப்படும். ஆனால், இந்த காரின் வெளிப்புறம், உட்புறம் என அனைத்து பகுதிகளிலும் குரோம் பினிஷிங் செய்யப்பட்டு ஜொலிக்கிறது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த எலக்ட்ரிக் காரில் 2 பேர் அமர்ந்து செல்லலாம்.

கதவிலும் குரோம் பினிஷிங்

கதவிலும் குரோம் பினிஷிங்

கதவுகளிலும் குரோம் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.

 றெக்கைகள் ஆபரணம் மட்டுமல்ல...!

றெக்கைகள் ஆபரணம் மட்டுமல்ல...!

றெக்கைகள் வெறும் அழகுக்காக மட்டும் இல்லை. அதில்தான் டெயில் லைட் மற்றும் பிரேக் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளது.

லித்தியம் அயான் பேட்டரி

லித்தியம் அயான் பேட்டரி

லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் இந்த காரின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 145 கிமீ வரை செல்லலாம்.

 டாப் ஸ்பீட்

டாப் ஸ்பீட்

இந்த எலக்ட்ரிக் கார் மணிக்கு அதிகபட்சமாக மணிக்கு 125 கிமீ வேகத்தில் செல்லும்.

Most Read Articles
English summary
The LA Auto Show has some interesting cars for its visitors. One such car is the Smar Forjeremy. This is an electric car designed by fashion designer Jeremy Scott. The car is based on German small car firm Smart's Smart Fortwo Electric Drive.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X