இந்த ஆண்டு இறுதியில் இயற்கை எரிவாயுவில் இயங்கும் நானோ

இந்த ஆண்டு இறுதியில் நானோ சிஎன்ஜி வேரியண்ட்டை விற்பனைக்கு கொண்டு வர டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக நானோ காருக்கு வரவேற்பு கூடி இருக்கிறது. இதையடுத்து, நானோவின் விற்பனையை தக்கவைக்கும் நடவடிக்கைகளை டாடா தீவிரம் காட்டி வருகிறது.

Tata Nano CNG

இதன்படி, சிஎன்ஜி வேரியன்ட் நானோவை இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு கொண்டு வர டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயு பிற எரிபொருள்களைவிட சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்கும் என்பதோடு, விலையும் குறைவு.

எனவே, டெல்லி உள்ளிட்ட சிஎன்ஜி எரிபொருள் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நானோ காரை விற்பனை செய்ய டாடா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், நானோ காரின் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என அந்த நிறுவனம் நம்புகிறது.

Most Read Articles
English summary
Tata motors planning to launch CNG variant of Nano by this year end. The CNG Nano's running costs and emissions are expected to be low.
Story first published: Friday, April 13, 2012, 16:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X