நியூயார்க் ஆட்டோ ஷோவில் அறிமுகமாகும் உலகின் முதல் பறக்கும் கார்

ஜேம்ஸ்பாண்டு படங்களில்தான் தரையிலிருந்து திடீரென ஆகாயத்தில் சீறிப் பாயும் பறக்கும் கார்களை பார்த்திருக்கிறோம். ஆனால், வணிக ரீதியில் தயாரிக்கப்பட்டுள்ள உலகின் முதல் பறக்கும் கார் அடுத்த மாதம் நியூயார்க் ஆட்டோ ஷோவில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த டெர்ராபியூஜியா நிறுவனம் இந்த பறக்கும் காரை உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டு மத்தியில் செய்தித்தாள்களில் பரபப்பை ஏற்படுத்திய இந்த கார் உலகின் வணிக ரீதியில் வெற்றிகரமான முதல் பறக்கும் காராக கருதப்படுகிறது.

டெர்ராபியூஜியா டிரான்சிஷன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பறக்கும் கார் அடுத்த மாதம் நடைபெற உள்ள நியூயார்க் ஆட்டோ ஷோவில் முதன்முறையாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. சமீபத்தில் இந்த காருக்கான அனைத்து கிளியரன்ஸ் சான்றுகளையும் அமெரிக்க போக்குவரத்து ஆணையம் வழங்கிவிட்டது.

இதனால், இந்த கார் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை டெர்ராபியூஜியா நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது. ஆனால், இந்த கார் பயன்படுத்தும்போது பல்வேறு நடைமுறை மற்றும் சட்ட சிக்கல்கள் இருப்பதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்த கார் விற்பனைக்கு அனுமதிக்கப்படுமா என்பதில் சந்தேகம் இருக்கிறது.

இந்த காரில் மடங்கி விரியும் தொழில்நுட்பம் கொண்ட இரண்டு இறக்கைகள் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த இறக்கைகள் வெறும் 30 வினாடிகளில் விரிந்து பறப்பதற்கு தயாராகி விடும். இந்த காரில் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 745 கிமீ தூரம் வரை பறக்கும்.

மணிக்கு அதிகபட்சமாக 177 கிமீ வேகத்தில் பறக்கும் இந்த கார் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1.40 கோடி விலையில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த காருக்கு இதுவரை 100 பேர் புக்கிங் செய்துள்ளதாக டெர்ராபியூஜியா தெரிவித்துள்ளது.

(டெர்ராபியூஜியா பறக்கும் கார் கேலரிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்)

Most Read Articles
English summary
Terrafugia Transition, the flying car will make its first public appearance at the New York International Auto show here in April. The 2012 New York International Auto Show will be held from April 6 through the 15th. It has already got the clearance in the US, and experts are hoping it could soon hit roads within five years. The US National Highway Traffic Safety Administration paved the way for the flying car to be rolled out after recently announcing exemptions to allow it on American roads.
Story first published: Monday, March 5, 2012, 15:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X