கர்நாடகத்தில் புதிய பைக் ஆலை கட்டுகிறது ட்ரையம்ப்

Triumph Motorcycles
பெங்களூர் அருகே ரூ.350 கோடி முதலீட்டில் புதிய மோட்டார்சைக்கிள் ஆலையை கட்டவுள்ளதாக ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக, கர்நாடக அரசுக்கும், ட்ரையம்ப் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பிரிட்டிஷ் பிராண்டான ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் பைக் தயாரிப்பில் உலக அளவில் சிறந்து விளங்குகிறது. கடந்த ஜனவரியில் நடந்த டெல்லி ஆட்டோ ஷோவில் 7 புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை பார்வைக்கு அசத்தியது ட்ரையம்ப்.

இந்த நிலையில், இந்தியாவிலேயே பைக்குகளை அசெம்பிள் செய்ய முடிவு செய்த அந்த நிறுவனம் தற்போது கர்நாடகத்தில் புதிய ஆலை கட்ட இருப்பதாக அறிவித்துள்ளது.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் ஆலை அமைய இருக்கும் பெங்களூர் அருகிலுள்ள நரசப்பூரிலிருந்து 50 கிமீ தூரத்தில் ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனமும் ஆலை அமைகிறது. இதற்காக, ரூ.350 கோடியை அந்த நிறுவனம் முதலீடு செய்கிறது.

போனிவில்லி, ஸ்ட்ரீட் ட்ரிபிள், ஸ்பீடு ட்ரிபிள் உள்ளிட்ட அனைத்து மாடல்களையும் இந்த புதிய ஆலையில் அசெம்பிளிங் செய்ய உள்ளது ட்ரையம்ப். அடுத்த ஆண்டு இந்த புதிய ஆலையில் உற்பத்தியை துவங்க ட்ரையம்ப் திட்டமிட்டிருக்கிறது.

Most Read Articles

English summary
British Bike maker Triumph Motorcycles company have signed a memorandum of understanding (MoU) with the Karnataka government to set up a bike assembly plant in the state within a year.
Story first published: Monday, May 28, 2012, 16:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X