பென்ஸ் இ கிளாஸுக்கு போட்டியான புதிய ஹூண்டாய் கார்!!

By Saravana

பென்ஸ் இ கிளாஸுக்கு போட்டியான இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் ஜெனிசிஸ் பிரிமியம் செடான் காரின் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜனவரி மாதம் நடைபெறும் டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் பார்வையாளர்களுக்கு தரிசனம் தர காத்திருக்கும் இந்த கார் ஹூண்டாய் தாயகமான தென்கொரியாவில் முதலில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, ஐரோப்பா, சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வரும்.

புளூயிடிக் டிசைன்

புளூயிடிக் டிசைன்

தற்போதைய முதலாம் தலைமுறை மாடலைவிட புதிய ஜெனிசில் வடிவத்தில் சற்று பெரிதாகியிருக்கிறது. மேலும், புதிய ஹூண்டாய் ஜெனிசிஸ் கார் புளூயிடிக் ஸ்கல்ப்ச்சர் 2.0 தாத்பரியத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அறுகோண முகப்பு கிரில், படுக்கை வாட்டு குரோம் பட்டைகள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல் நேர ரன்னிங் விளக்குகளுடன் பார்ப்பவர்களை அசத்துகிறது.

 எஞ்சின்

எஞ்சின்

தென்கொரிய மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் ஜெனிசிஸ் காரில் 3.0 லிட்டர், 3.3 லிட்டர், 3.8 லிட்டர் மற்றும் 5.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. அனைத்து மாடல்களிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும்.

 பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

மேம்படுத்தப்பட்ட இந்த எஞ்சின்களில் அதிக சக்திவாய்ந்த 5.0 லிட்டர் எஞ்சின் 419 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். 0 - 100 கிமீ வேகத்தை 5.4 வினாடிகளில் எட்டிவிடும்.

 அம்சங்கள்

அம்சங்கள்

ரேடார் கன்ட்ரோல் க்ரூஸ் கன்ட்ரோல், புதிய டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் மல்டி லிங்க் ரியர் சஸ்பென்ஷன் உள்ளிட்ட அம்சங்களுடன் பிற சொகுசு செடான் கார்களுடன் போட்டி போட உள்ளது.

 வசதிகள்

வசதிகள்

9.2 இஞ்ச் டச் ஸ்கிரீன், ஆப்பிள் சிரி அப்ளிகேஷனை சப்போர்ட் செய்யும் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், கூகுள் மேப் நேவிகேஷன், லெதர் இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

ஆட்டோமேட்டிக் பிரேக், ப்ளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் சிஸ்டத்துடன் இணைந்த வைண்ட் ஸ்கிரீனில் தகவல்களை அளிக்கும் ஹெட் அப் டிஸ்ப்ளே சிஸ்டம் உள்ளிட்ட பல புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. விலை உள்ளிட்ட தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Most Read Articles
English summary
Hyundai Genesis is the South Korean automaker's flagship premium sedan model, the second generation of which has now been revealed. The Mercedes-Benz E-Class rival from Hyundai will initially go on sale in its home country.
Story first published: Wednesday, November 27, 2013, 18:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X