எலக்ட்ரிக் கார்கள் பற்றிய வரலாற்றுத் துளிகள்

By Saravana
Electric Cars
எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் கார்கள் இருக்கும் என கருதப்படுகிறது. விதவிதமான டிசைன்களில் எலக்ட்ரிக் கார்களை தற்போது கார் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. இந்த நிலையில், பெட்ரோல் கார்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே எலக்ட்ரிக் கார்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.

1828ம் ஆண்டு ஹங்கேரி நாட்டை சேர்ந்த அன்யாஸ் ஜெட்லிக் என்பவர்தான் முதன்முதலில் பேட்டரியில் இயங்கும் சிறிய வாகனத்தை கண்டுபிடித்தார். இந்த வாகனத்தில் பயணிகள் ஏற்றிச் செல்ல முடியாது என்றாலும் எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்திற்கு இதுதான் முதல் வித்து. இதைத்தொடர்ந்து, எலக்ட்ரிக் கார்களுக்கான தொழில்நுட்பம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.

முதலில் பேட்டரியை அடிக்கடி மாற்ற வேண்டிய நிலை இருந்தது. ரீசார்ஜ் செய்துகொள்ளும் பேட்டரி கண்டுபிடிக்கப்பட்ட பின்பு எலக்ட்ரிக் கார்களின் தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்தது.

19ம் நூற்றாண்டில் எலக்ட்ரிக் கார்கள் நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு பிரபலமாகின. 1900 களில் அமெரிக்காவில் பெட்ரோல் மற்றும் நீராவியில் இயங்கும் கார்கள் வந்தபின் கூட எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முன்னிலை வகித்தன.

பெட்ரோல் மற்றும் நீராவியில் இயங்கும் கார்களை ஸ்டார்ட் செய்வதில் இருந்த பிரச்னை மற்றும் புகை ஆகியவை வாடிக்கையாளர்களை எலக்ட்ரிக் கார்கள் மீது ஆர்வம் காட்ட வைத்தது. எலக்ட்ரிக் கார்களின் கையாளுமை, பராமரிப்பும் எளிதாக இருந்தது.

இந்த நிலையில், டெக்ஸாஸ் மாகாணத்தில் கச்சா எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின் அமெரிக்காவில் பெட்ரோல் மலிவு விலையில் கிடைக்கத் துவங்கியது. இதையடுத்து, எலக்ட்ரிக் கார்களுக்கான மவுசு குறைந்து பெட்ரோல் கார்கள் பக்கம் வாடிக்கையாளர்கள் கவனத்தை திருப்பினர்.

மேலும், எலக்ட்ரிக் கார்களின் தயாரிப்புக்கான அபரிதமான செலவீனத்தால் அதன் விலை அதிகமாக இருப்பதும், நீண்ட தூரம் செல்ல முடியாத நிலை இருப்பதும் அன்றிலிருந்து இன்று வரை சவாலான விஷயமாகவே இருக்கிறது.

மரபு சார்ந்த எரிபொருளுக்கான தட்டுப்பாடு, சுற்றுச் சூழல் மாசுபடுதல் ஆகிய விஷயங்கள் மீண்டும் எலக்ட்ரிக் கார்கள் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது.

எலக்ட்ரிக் கார்களில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை தவிர்க்கும் வகையில் பேட்டரி மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டிலும் இயங்கும் இரட்டை எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஹைபிரிட் கார்களாக பல நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன.

மேலும், எலக்ட்ரிக் கார்களுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான செலவீனத்தை குறைக்கும் வகையில் பல முன்னணி நிறுவனங்கள் கைகோர்த்து செயல்பட்டு வருகின்றன. இதனால், எதிர்காலத்தில் எலக்ட்ரிக் கார்களின் உற்பத்தி செலவீனம் வெகுவாக குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் கார்களின் விற்பனையை ஊக்குவிக்கும் முயற்சிகளை பல்வேறு நாட்டு அரசுகளும் முழு உத்வேகத்துடன் துவங்கியுள்ளன. சார்ஜிங் நெட்வொர்க், கார்களுக்கு மானியம் வழங்குவது உள்ளிட்டவை இதில் அடக்கம்.

2012 டிசம்பர் நிலவரப்படி, நிசான் லீஃப், தெல்ஸா ரோட்ஸ்டெர், ரேவா ஐ, மிட்சுபிஷி ஐ எம்ஐஇவி, ஸ்மார்ட் இடி, வீகோ விப் லைஃப், ரினால்ட் புளூயன்ஸ் இசட்இ, ஃபோர்டு ஃபோகஸ் எலக்ட்ரிக், பிஎம்டபிள்யூ ஆக்ட்டிவ்இ, கோடா, தெல்ஸா மாடல் எஸ், பட்டி, ஹோண்டா ஃபிட் இவி, ரினால்ட் ஸோயி, பிஒய்டி இ6, பொல்லூர் புளூகார் ஆகியவை நெடுஞ்சாலையில் செல்லத்தக்க, விற்பனை நிலையில் இருக்கும் எலக்ட்ரிக் கார்கள்.

இந்தியாவில் ரேவா நிறுவனம் முதலாவதாக எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது. 2 பேர் மட்டுமே பயணம் செய்யும் வசதிகொண்ட இந்த கார் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றது அல்ல என்பதோடு, பிக்கப், விலை ஆகியவையும் வாடிக்கையாளர்களை கவரவில்லை.

தற்போது மஹிந்திரா ஆளுகைக்கு கீழ் வந்துள்ள ரேவா 4 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட காரை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் வசதிகொண்ட இந்த கார் வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும் என தெரிகிறது.

மேலும், மத்திய அரசும் எலக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிப்பதற்காக பெரும் நிதியை ஒதுக்கியுள்ளது. எலக்ட்ரிக் கார்கள் மீண்டும் முக்கியத்துவம் பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

எலக்ட்ரிக் கார்கள் உண்மையிலேயே சுற்றுச் சூழலுக்கு உகந்தவையா? மற்றொரு பகுதியில் பார்க்கலாம்.

Most Read Articles
English summary
The electric car is being considered as the future of private transport replacing petrol and diesel powered cars. Electric cars of different shapes are being designed and developed by car makers across the globe but do you know that electric cars were built much earlier than petrol cars?
Story first published: Thursday, January 3, 2013, 15:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X