குட்டி அம்பாசடரை உறுதிப்படுத்திய ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட அம்பாசடரை வடிவமைத்து வருவதை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் உத்தம் போஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் முனைப்பில் இருந்து வருகிறது. ச

சமீபத்தில் என்கோர் என்ற பிஎஸ் - 4 டீசல் அம்பாசடரை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்தது. டாக்சி மார்க்கெட்டை குறிவைத்து இந்த புதிய அம்பாசடர் டீசல் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, புதிய காம்பெக்ட் காரை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

டாக்சி மார்க்கெட்

டாக்சி மார்க்கெட்

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காரும் டாக்சி மார்க்கெட்டை முதன்மையாக கொண்டு வடிவமைக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

அம்பியின் தம்பி

அம்பியின் தம்பி

அம்பாசடரை அடிப்படையாகக் கொண்டே இந்த புதிய செடான் காரும் வடிவமைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதது.

எளிதான டிரைவிங்

எளிதான டிரைவிங்

நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கும், பார்க்கிங் செய்வதற்கும் எளிதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

விலை

விலை

வரிச்சலுகை மூலம் தற்போதைய அம்பாசடரை விட குறைவான விலையில் புதிய அம்பாசடர் வரும். ரூ.4 லட்சம் விலையில் வரும் வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த நிதி ஆண்டில் இந்த புதிய காம்பெக்ட் அம்பாசடர் செடான் மார்க்கெட்டுக்கு வரும் என்று ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் உத்தம் போஸ் கூறியிருக்கிறார்.

Most Read Articles
English summary
Hindustan Motors is gearing up for the launch of a small car in the next fiscal. The new sub-four meter small car will be manufactured on the Ambassador platform and will be only in sedan variant, company MD and CEO Uttam Bose said to reporters.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X