இந்தியாவில் நுழைய லோட்டஸ், ஸ்பைக்கர், பகனி ஆயத்தம்... ரோடு தாங்குமா?

By Saravana

இந்தியாவில் கால் பதிக்க லோட்டஸ், ஸ்பைக்கர், பகனி ஆகிய சூப்பர் கார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. உலகப் புகழ்பெற்ற சூப்பர் கார் நிறுவனங்கள் இந்தியாவில் களமிறங்கி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது புதிதாக மேற்கண்ட மூன்று நிறுவனங்களும் இணைய துடி துடித்துக்கொண்டு க்யூவில் நிற்கின்றன.

ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலின் நீளம் அதிகரித்து வருகிறது. ஃபெராரி, லம்போர்கினி உள்ளிட்ட பல விலையுயர்ந்த கார் நிறுவனங்கள் வந்துவிட்ட நிலையில், அடுத்ததாக இங்கிலாந்தை சேர்ந்த லோட்டஸ், நெதர்லாந்தை சேர்ந்த ஸ்பைக்கர் மற்றும் இத்தாலியை சேர்ந்த பகனி உள்ளிட்ட சூப்பர் கார் நிறுவனங்கள் இந்தியாவில் விரைவில் களமிறக்க உள்ளன. மற்ற சூப்பர் கார் நிறுவனங்கள் போன்றே இந்தியாவில் அதிகாரப்பூர்வ டீலரை நியமித்து நேரடியாக கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய இந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

ஸ்பைக்கர் சி8 ஏய்ல்ரோன்

ஸ்பைக்கர் சி8 ஏய்ல்ரோன்

இந்த ஆண்டு இறுதியிலேயே ஸ்பைக்கர் இந்தியாவில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, அங்கீகரிக்கப்பட்ட டீலரையும் நியமித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி விரைவில் முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பைக்கர் பி6 வெனேட்டர்

ஸ்பைக்கர் பி6 வெனேட்டர்

ஸ்பைக்கர் நிறுவனம் முதலாவதாக சி8 ஏய்ல்ரோன் சூப்பர் காரை விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்த காரில் 400 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4.2 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். மணிக்கு அதிகபட்சமாக 300 கிமீ வேகத்தில் செல்லும் கட்டமைப்பு கொண்டது. இந்த காரைத் தொடர்ந்து, பி6 வெனேட்டர் காரை விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

பகனி திட்டம்

பகனி திட்டம்

இத்தாலியை சேர்ந்த சூப்பர்கார் நிறுவனமான பகனியின் ஸோன்டா மற்றும் ஹியூரா சூப்பர் கார்கள் புகழ்பெற்றவை. உலகின் அதிவேக கார்களில் பகனியின் ஹியூராவும் ஒன்று. இந்த ஹைப்பர் காரில் 700 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சினை ஏஎம்ஜி நிறுவனம் பிரத்யேமாக ட்யூனிங் செய்து கொடுத்துள்ளது.

பகனி ஹியூரா

பகனி ஹியூரா

பகனி கார் நிறுவனம் இந்தியா திட்டத்தை தற்போது பரிசீலனையில் வைத்துள்ளது. இதுகுறித்து அடுத்த ஆண்டு அறிவிப்பு வெளியிட அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

லோட்டஸ் கார்கள்

லோட்டஸ் கார்கள்

ஸ்பைக்கர், பகனியை தொடர்ந்து லோட்டஸ் கார் நிறுவனமும் இந்தியாவில் களமிறங்குவதற்கான வாய்ப்புகளை பரிசீலித்து வருகிறது. முதல் கட்ட ஆய்வுகளில் இந்தியாவில் களமிறங்குவதற்கான சாதகமான அம்சங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சேவை திட்டம்

சேவை திட்டம்

இந்த மூன்று நிறுவனங்களுமே அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் இல்லை. எனவே, டீலர்ஷிப்புகளும் குறைவாகவே இருக்கும். ஸ்பைக்கர் நிறுவனம் டெல்லியில் மட்டுமே ஷோரூம் வைத்து கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதே பாணியை பிற இரண்டு நிறுவனங்களும் பின் தொடர வாய்ப்புள்ளது.

Most Read Articles

English summary
The number of millionaires in India are growing every year and this is attracting the attention of ultra expensive car makers from Europe. Names such as Ferrari, Lamborghini, Koenigsegg and Bugatti are already here, but there are other big names which are now planning to make their entry into India.
Story first published: Wednesday, October 30, 2013, 12:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X