ஸ்பெஷல் எடிசன் ஸ்மார்ட் போகான்செப்ட் கார்: சிறப்பம்சங்கள்

நெரிசல் மிகுந்த நகர்ப்புற போக்குவரத்துக்கு ஏற்ப தீர்வு காண்பதற்காக புதிய ஸ்மார்ட் காரை டெய்ம்லர் அறிமுகம் செய்துள்ளது. ஜெனீவா மோட்டார் ஷோவில் கான்செப்ட் நிலையில் வைக்கப்பட்டிருந்த இந்த கார் தற்போது உற்பத்தி நிலையை எட்டியுள்ளது. போகான்செப்ட் என்ற டிசைனர் பர்னிச்சர் நிறுவனத்தின் கைவண்ணத்தில் சிறப்பு அம்சங்களுடன் இந்த காரை டிசைன் செய்து களமிறக்கியிருக்கிறது டெய்ம்லர்.

திறந்து மூடும் கூரை வசதி, மல்டி கலர் பெயின்ட்டிங், பல்வேறு அம்சங்கள் கொண்ட இன்டிரியர் என படு அசத்தலான இந்த குட்டிக் காருக்கு முன்பதிவும் துவங்கிவிட்டது. பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் மாடல்களில் கிடைக்கும் இந்த கார் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை அறிந்துகொள்ள ஸ்லைடருக்கு வாருங்கள்.

பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக்

பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக்

55 கேவி எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் இரண்டுவிதமான சக்தி கொண்ட 2 பெட்ரோல் மாடல்களில் கிடைக்கும்.

பவர்

பவர்

70 எச்பி மற்றும் 83 எச்பி சக்தியை வெளிப்படுத்தும் இரண்டுவிதமான பவர் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் மாடல்களில் கிடைக்கும். 55 kw எலக்ட்ரிக் மோட்டார் 73 எச்பி பவரை வெளிப்படுத்தும்.

வண்ண மயம்

வண்ண மயம்

கிறிஸ்டல் வெள்ளை கலரில் பாடி பெயின்ட் கொடுக்கப்பட்டுள்ளது. வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் பல இடங்களில் இரட்டை வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளன. ரியர் வியூ மிரர் எலுமிச்சை நிற கேப்புகளுடன் கவர்கிறது.

அலாய் வீல்

அலாய் வீல்

ஆந்த்ராசைட் வண்ணத்தில் கவர்ச்சியான டிசைன் கொண்ட அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அலாய் வீலில் லோகோ

அலாய் வீலில் லோகோ

அலாய் வீல் ஹப் கேப்பில் ஸ்மார்ட் லோகோ பொறிக்கப்பட்டுள்ளதோடு, அதனை சுற்றி எலுமிச்சை நிற கலரில் வளையம் சூழ கவர்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

டொபாக்கோ பிரவுன் லெதர் வண்ண இருக்கையின் நடுவில் சாம்பல் நிற பேப்ரிக் பினிஷிங் செய்யப்பட்டுள்ளது.

டேஷ்போர்டு

டேஷ்போர்டு

டேஷ்போர்டிலும் லெதர் பினிஷிங் செய்யப்பட்டுள்ளதோடு, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

டாக்கோமீட்டர்

டாக்கோமீட்டர்

கடிகார வடிவம் கொண்ட டாக்கோமீட்டர் மற்றும் பக்கத்தில் ஒரு கடிகாரமும் டேஷ்போர்டின் மேற்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏர்கான் கன்ட்ரோல் சுவிட்சுகளை காணலாம்.

இருக்கை

இருக்கை

சொகுசான லெதர் இருக்கை கண்ணை கவரும் வண்ணங்களில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 மனதை தைக்கும் தையல்

மனதை தைக்கும் தையல்

இருக்கை போன்றே ஸ்டீயரிங் வீலிலும் எலுமிச்சை வண்ண நூலில் தையல்கள் போடப்பட்டுள்ளதை காணலாம்.

மிரர் கேப்

மிரர் கேப்

எலுமிச்சை வண்ண மிரர் கேப்புகளை காணலாம்.

சன்ரூஃப்

சன்ரூஃப்

கூபே மாடலில் பானரோமிக் சன்ரூஃப் பொருத்தப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
English summary
Daimler and Danish designer furniture maker BoConcept came together earlier this year to realize a common purpose. "to make optimal use of the limited space available in the city with attractively designed products", as Annette Winkler, CEO of Daimler owned Smart put it. The predictable outcome was a concept car based on the Smart ForTwo Brabus Cabrio. The concept was simply called ForTwo BoConcept.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X