அடுத்து பேட்டரியில் இயங்கும் பறக்கும் கார்: டெர்ராஃபியூஜியா அறிவிப்பு

அமெரிக்காவை சேர்ந்த டெர்ராஃபியூஜியா நிறுவனம் வணிக ரீதியிலான பறக்கும் கார் தயாரிப்பில் முன்னிலை வகிக்கிறது. டிரான்ஸ்சிஷன் என்ற பெயரில் உலகின் முதல் வணிக ரீதியிலான பறக்கும் காரை அந்த நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. ரூ.1.43 கோடியில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த காருக்கு 100 பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அடுத்ததாக எலக்ட்ரிக் பறக்கும் காரை தயாரிக்கும் பணியில் டெர்ராஃபியூஜியா இறங்கியுள்ளது. டிஎஃப்-எக்ஸ் என்ற பெயரில் வடிவமைக்கப்படும் இந்த புதிய எலக்ட்ரிக் பறக்கும் காரை வடிவமைக்கும் பணிகள் விரைவில் துவங்க இருப்பதாகவும், இத்திட்டம் நிறைவுபெறுவதற்கு 8 முதல் 12 ஆண்டுகள் பிடிக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், புதிய எலக்ட்ரிக் காரின் பறக்கும் காரின் சில விபரங்களையும் வெளியிட்டிருக்கிறது.

ஹைபிரிட் பறக்கும் கார்

ஹைபிரிட் பறக்கும் கார்

இந்த கார் எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பெட்ரோல் எஞ்சின் ஆகிய இரண்டிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படும். 4 பேர் பயணம் செய்யும் வசதியை கொண்டிருக்கும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்தது

சுற்றுச்சூழலுக்கு உகந்தது

தரையில் செல்லும்போதும், உயர எழும்புவதற்கும், இறங்குவதற்கும் எலக்ட்ரிக் மோட்டார் துணைபுரியும். ஆகாயத்தில் பறக்கும்போது பெட்ரோல் எஞ்சின் துணைபுரியும்.

எளிதாக மேலெழும்பும்

எளிதாக மேலெழும்பும்

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டிரான்ஸ்சிஷன் பறக்கும் காருக்கு ஓடுபாதை அவசியம். ஆனால், இந்த பறக்கும் கார் தரையில் இருந்து ஹெலிகாப்டர் போன்றே செங்குத்தாக மேலே எழும்பும் என்பதால் ஓடுபாதை தேவையில்லை.

தானியங்கி வசதி

தானியங்கி வசதி

ஒருவேளை தரையிறங்குவதில் பிரச்னை ஏற்பட்டால், பாரசூட் மூலம் பயணிகள் வெளியேற முடியும். மேலும், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் முறையில் இந்த பறக்கும் காரை பறக்கச் செய்ய முடியும் என்பதோடு தரையிறக்கவும் முடியும்.

சூப்பர் வசதி

சூப்பர் வசதி

சென்று சேர வேண்டிய இடத்தை பதிவு செய்துவிட்டால், தானியங்கி முறையில் அந்த இடத்துக்கு பறந்து சென்று, பாதுகாப்பாக தானாகவே தரையிறங்கிவிடும்.

அவசர காலத்தில்....

அவசர காலத்தில்....

ஒருவேளை, அவசரமாக தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்புவதுடன் தானாகவே தரையிறங்கிவிடும்.

வானிலையையும் கணிக்கும்

வானிலையையும் கணிக்கும்

வானிலை மோசமாக இருந்தாலோ அல்லது இதன் வழியில் பிற விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வந்தாலும் அதனை கண்டுபிடித்து எச்சரிக்கும் என்பதோடு, பாதையையும் மாற்றிக் கொள்ளும்.

தொல்லையில்லா பயணம்

தொல்லையில்லா பயணம்

இது மிகவும் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் என டெர்ராஃபியூஜியா தெரிவித்துள்ளது.

டிரைவிங் பயிற்சி

டிரைவிங் பயிற்சி

இதனை ஓட்டுவதற்கு வெறும் 5 மணி நேர பயிற்சி போதுமானது என டெர்ரஃபியூஜியா தெரிவித்துள்ளது.

 பயண தூரம்

பயண தூரம்

குறைந்தது 800 கிமீ தூரம் இடைநில்லாமல் செல்ல முடியும்.

மாதிரி படங்கள்

மாதிரி படங்கள்

டிஎஃப்-எக்ஸ் என்ற இந்த பறக்கும் காரின் வடிமவைப்பு பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. மாதிரி படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் டெர்ரஃபியூஜியாவின் டிரான்சிஷன் பறக்கும் காரின் விபரங்களை காணலாம்.

வேகம்

வேகம்

டிரான்சிஷன் கார் தரையில் அதிகபட்சமாக 110 கிமீ வேகத்திலும், ஆகாயத்தில் மணிக்கு 177 கிமீ வேகத்திலும் பறக்கும்.

எரிபொருள் டேங்க்

எரிபொருள் டேங்க்

இதில், 87 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க பொருத்தப்பட்டிருக்கிறது.

எரிபொருள் செலவு

எரிபொருள் செலவு

ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் தொடர்ச்சியாக 4 மணிநேரம் பறக்க முடியும். ஒரு மணிநேரம் பறப்பதற்கு 19 லிட்டர் எரிபொருள் செலவாகும்.

மைலேஜ்

மைலேஜ்

தரையில் செல்லும்போது ஒரு லிட்டருக்கு 15 தூரம் வரை செல்லும் என்று டெர்ராபியூஜியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிரைவிங் பயிற்சி

டிரைவிங் பயிற்சி

புக்கிங் செய்துள்ளவர்கள் டிரான்சிஷன் காரை 20 மணிநேரம் ஓட்டி பயற்சி பெற வேண்டும். மேலும், ஓட்டுனர் தேர்விலும் வெற்றி பெற்றால்தான் கார் டெலிவிரி கொடுக்கப்படும்.

விலை

விலை

கடந்த ஆண்டு முன்பதிவு துவங்கிய இந்த பறக்கும் காருக்கு ரூ.1.43 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #terrafugia #four wheeler
English summary
In about a decades time we could potentially see vertical takeoff and landing flying cars in our skies. This is the required time, Terrafugia says it will take to develop the TF-X flying car, capable of vertical takeoff, like a helicopter.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X