விரைவில் எலக்ட்ரிக் கார்களிலும் கியர் பாக்ஸ்: பாஷ் தகவல்

கியர் பாக்ஸ் கொண்ட எலக்ட்ரிக் கார்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று பாஷ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது எலக்ட்ரிக் கார்கள் ஒற்றை கியர் கொண்டதாகவும், டைரக்ட் டிரைவ் எனப்படும் மின் மோட்டாரிலிருந்து ஆற்றல் நேரடியாக சக்கரங்களுக்கு கடத்தப்படும் தொழில்நுட்பம் கொண்டதாக இருக்கின்றன. கியர் பாக்ஸ் மிக எளிதானதாக இருக்கின்றன.

Volkswagen E up

இந்தவகை கியர் பாக்ஸ்களின் விலையும் குறைவாக இருப்பதால் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த வகை கியர் பாக்ஸை பயன்படுத்துகின்றன.

இந்த நிலையில், சாதாரண கார்கள் போன்றே வேகத்துக்கு தகுந்தவாறு கியர்களை மாற்றிக் கொள்ளும் புதிய கியர் பாக்ஸ் கொண்ட எலக்ட்ரிக் கார்கள் விரைவில் அறிமுகமாகும் என பாஷ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், கூடுதல் மைலேஜ் தரும் எலக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டில் அறிமுகமாகும் என்றும் கூறியுள்ளது. பிரம்மோ எலக்ட்ரிக் பைக்கில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. இது மிகச்சிறப்பான மைலேஜை தருகிறது.

இதே தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எலக்ட்ரிக் கார்களிலும் கியர் பாக்ஸ் கொடுக்கப்படும் என்று சாத்திக்கூறுகளை தெரிவித்துள்ளது. இதன்மூலம், அதிக மைலேஜ் தரும் எலக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டுக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

Most Read Articles
English summary
Bosch, through a report by Caradvice, has said that electric cars in the future may have transmissions. The current trend is direct-drive for electric cars, which is essentially a single gear that moves the car right from stationary to its top speed. Direct-drive transmissions have the benefits of being cheaper and less complicated with fewer moving parts, but all that may change to tap into the instant torque an electric motor provides, so it can be utilised even at higher speeds.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X