லேண்ட்விண்ட்... லேண்ட்ரோவர் எவோக்கின் 'ஜெராக்ஸ்' மாடல் சீனாவில் அறிமுகம்!

லேண்ட்ரோவர் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடலான எவோக் எஸ்யூவியின் அட்டக்காப்பி மாடல் சீனாவில் சமீபத்தில் நடந்த ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

லேண்ட்விண்ட் எக்ஸ்7 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய மாடல் லேண்ட்ரோவர் எவோக் எஸ்யூவியின் ஜெராக்ஸ் காப்பி போலவே உள்ளது. இன்னும் சில மாதங்களில் சீன மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் இந்த புதிய மாடல் லேண்ட்ரோவர் நிறுவனத்துக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

 

ஏனெனில், எவோக் எஸ்யூவின் விலையில் மூன்றில் ஒரு பங்கு விலையில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது. அதாவது, 1.07 லட்சம் டாலர் விலையில் எவோக் எஸ்யூவி விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த புதிய லேண்ட்விண்ட் எக்ஸ்7 எஸ்யூவி 24,000 டாலர் விலையில் விற்பனைக்கு செல்ல இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதெடார்பாக, ஜாகுவார் லேண்ட்ரோவர் செய்திதொடர்பாளர் ஒருவர் கூறுகையில்," உலக அளவில் எவோக் எஸ்யூவியின் டிசைன் வாடிக்கையாளர்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது. இந்த நிலையில், எவோக் போன்றே வடிவமைக்கப்பட்டிருக்கும் சீன மாடல் குறித்து காப்புரிமை விதிகளின்படி நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்," என்று தெரிவித்தார்.

Landwind
 

வெளிப்புறத்தில் மட்டுமல்ல இன்டிரியரிலும் ஒரே மாதிரி இருப்பதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மலிவான மர அலங்கார வேலைப்பாடுகள் மற்றும் இருக்கைகள் போன்றவை கொடுக்கப்பட்டிருப்பதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. லேண்ட்விண்ட் எக்ஸ்7 எஸ்யூவியை கண்டு லேண்ட்ரோவர் மட்டுமல்ல, எவோக் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Most Read Articles

English summary
Chinese automakers Jiangling Motors and Changan Auto has created LandWind X7 which replicates the exact copy of British luxury carmaker Jaguar Land Rover's Range Rover Evoque. The LandWind X7 was launched at the Guangzhou motor show in China last month. 
Story first published: Saturday, December 6, 2014, 11:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X