ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பு!

By Saravana

புகழ்பெற்ற அம்பாசடர் காரை தயாரித்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிக பிரபல கால் மாடலாக திகழ்ந்த அம்பாசடர் மேற்கு வங்க மாநிலம், உத்தரபாராவில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் உறபத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், அம்பாசடர் கார் விற்பனை படுமோசமானதால், கடும் நெருக்கடியில் சிக்கியது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்.

HM Amby

இதையடுத்து, கடந்த மே மாதத்துடன் அம்பாசடர் கார் உற்பத்தியை நிறுத்துவதாக அந்த நிறுவனம் அறிவித்தது. இதனால், அங்கு பணிபுரிந்து வந்த 2,300 தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

இந்தநிலையில், தனது தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வூதியத் திட்டத்தை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நேற்று அறிவித்தது. உத்தரபாரா ஆலை வாயிலில் இதற்கான அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

ஓய்வுபெறும்போது தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமாக வழங்கப்பட வேண்டிய தொகையுடன், கூடுதலாக ஒரு லட்ச ரூபாயை சேர்த்து வழங்குவதாக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 20ந் தேதி வரை விருப்ப ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருக்கும் என நோட்டீஸில் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Hindustan Motors, the CK Birla-owned company has offered voluntary retirement scheme (VRS) to all its employees.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X