விற்பனையில் ஒரு லட்சத்தை கடந்த ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்!

By Saravana

விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 10 மாதங்களில் ஒரு லட்சம் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்திய மார்க்கெட்டுக்கு வந்த கிராண்ட் ஐ10 கார் ஸ்டைல், வசதிகள், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

மேலும், ஏராளமான ஆட்டோமொபைல் விருதுகளை பெற்றதோடு, இந்த ஆண்டின் இந்தியாவின் சிறந்த கார் மாடல் என்ற விருதையும் பெற்றது. இந்த நிலையில், விற்பனையில் ஒரு லட்சம் என்ற புதிய மைல்கல்லை கிராண்ட் ஐ10 கார் தொட்டுள்ளது.

Hyundai Grand i10

இதுகுறித்து ஹூண்டாய் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவு அதிகாரி ராகேஷ் ஸ்ரீவத்சவா கூறுகையில்," தரம், வசதிகள், தொழில்நுட்பம் என அனைத்திலும் இந்த செக்மென்ட்டின் முன்மாதிரி மாடலாக கிராண்ட் ஐ10 விளங்குகிறது.

மதிப்பு வாய்ந்த மாடலாக வலம் வரும் கிராண்ட் ஐ10 குறுகிய காலத்தில் விற்பனையில் ஒரு லட்சத்தை கடந்திருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்த தருணத்தில் வாடிக்கையாளர்களுக்கு நன்றிகளை உரித்தாக்குகிறோம்," என்று கூறினார்.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் கிராண்ட் ஐ10 கார் தற்போது எல்பிஜி கிட் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது. எல்பிஜியில் இயங்கும் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்டதாக கிடைக்கும்.

Most Read Articles
English summary
Hyundai Motor India Limited (HMIL), the country’s largest exporter and the second-largest car manufacturer, has achieved yet another milestone with the delivery of 100,000 Hyundai Grand cars within 10 months of its launch. 
Story first published: Friday, July 4, 2014, 18:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X