இந்தியாவில் ஜாகுவார் லேண்ட்ரோவரின் 5ம் ஆண்டு கொண்டாட்டம்

By Saravana

இந்தியாவில் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம்(ஜேஎல்ஆர்) கால் பதித்து 5 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. இதனை கொண்டாடும் விதத்தில், தனது சில கார் மாடல்களுக்கு 3 ஆண்டுகளுக்கான சர்வீஸ் திட்டத்தை வழங்குகிறது.

இந்த 5 ஆண்டுகளில் இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் வலுவான அடையாளத்தை ஜாகுவார் லேண்ட்ரோவர் பெற்றிருக்கிறது. நாடுமுழுவதும் 19 நகரங்களில் உள்ள 21 டீலர்ஷிப்புகள் வழியாக எஃப் டைப் மற்றும் எக்ஸ்கேஆர்- எஸ் கார்களை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

Jaguar XF

இந்தியாவில் லேண்ட்ரோவர் ப்ரீலேண்டர்-2 , ஜாகுவார் எக்ஸ்எஃப் ஆகிய கார் மாடல்களை புனேயில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்கிறது. இது இந்திய மார்க்கெட்டில் ஜேஎல்ஆர் நிறுவனத்தின் முக்கிய மைல்கல்லாக குறிப்பிடலாம். மேலும், பல புதிய மாடல்களை புனே ஆலையில் அசெம்பிள் செய்வதற்கான திட்டத்தையும் கைவசம் வைத்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த பழம் பெருமை வாய்ந்த ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் டாடா மோட்டார்ஸ் கீழ் வந்தபின் பெரும் முதலீடுகள் காரணமாக இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் பல புதிய மார்க்கெட்டுகளில் அடியெடுத்து வைத்துள்ளதுடன், நல்ல வர்த்தக வளர்ச்சியை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Tata Motors owned British automobile brands Jaguar Land Rover will be marking its fifth anninversary in India. Both the brands have grown significantly as a luxury manufacturer in India. Their vehicles offer exclusivity and popularity at a reasonable price.
Story first published: Thursday, August 14, 2014, 15:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X