இந்தியாவில் சிறிய ரக விமான விற்பனையை துவங்கும் மஹிந்திரா!

By Saravana

இந்தியாவில் சிறிய ரக விமானங்கள் விற்பனையை துவங்குவதற்கான அனுமதியை மஹிந்திரா பெற்றிருக்கிறது.

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு குழுமமான மஹிந்திரா, விமான தயாரிப்புத் துறையிலும் ஈடுபட்டுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிப்ஸ்ஏரோ நிறுவனத்துடன் இணைந்து சிறிய ரக விமானங்களை தயாரித்து வெளிநாடுகளில் விற்பனை செய்து வருகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள விதிமுறைகளால் விமானங்களை விற்பனை செய்ய முடியாத நிலை இருந்தது.

இந்தநிலையில், இந்தியாவில் சிறிய ரக விமானங்களை விற்பதற்கான அனுமதியை மத்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து பெற்றுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் விரைவில் சிறிய ரக விமானங்களின் விற்பனையை மஹிந்திரா துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆஸ்திரேலிய நிறுவனங்கள்

ஆஸ்திரேலிய நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிப்ஸ்ஏரோ மற்றும் ஏரோஸ்டாஃப் ஆகிய விமான தயாரிப்பு நிறுவனங்களை சில ஆண்டுகளுக்கு முன் ரூ.175 கோடி மதிப்பீட்டில், மஹிந்திரா கையகப்படுத்தியது. இதன்மூலம், அந்த நிறுவனங்களின் விமானங்களை மஹிந்திரா வெளிநாடுகளில் விற்பனை செய்து வருகிறது.

விமான மாடல்

விமான மாடல்

இந்தியாவில் ஜிஏ- 10 என்ற விமான மாடலை முதலில் விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானம் 10 பேர் அமர்ந்து செல்லும் வசதி கொண்டதாக இருக்கும்.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

இந்த விமானத்தில் 11 பாரசூட்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அகலமான கண்ணாடி ஜன்னல்கள், சிறப்பான இடவசதி கொண்டதாக இருக்கும். பயணிகள் மிகுந்த பாதுகாப்பு உணர்வுடன் பயணிக்க முடியும் என மஹிந்திரா தெரிவிக்கிறது.

பன்முக பயன்பாடு

பன்முக பயன்பாடு

பயணிகள் சேவை துறை மட்டுமின்றி, மீட்புப் பணிகள், ராணுவப் பணிகள், சுற்றுலாத் துறை, ஆம்புலன்ஸ், சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தும் வசதி கொண்டதாக இருக்கும். இந்த விமானத்தின் இருக்கைகளை தேவைப்படும்போது சில நிமிடங்களில் கழற்றிவிட முடியும்.

மஹிந்திரா மகிழ்ச்சி

மஹிந்திரா மகிழ்ச்சி

பல ஆண்டுகளாக இந்தியாவில் விமானங்களை விற்பனை செய்வதற்கு இருந்து வந்த முட்டுக்கட்டைகள் தற்போது நீங்கியுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. மேலும், பிரதமர் மோடியின் சமீபத்திய ஆஸ்திரேலிய பயணமும் இதற்கு பயனுள்ளதாக அமைந்திருப்பதாகவும், இது மிகுந்த ஊக்கமளிப்பதாகவும் மஹிந்திரா தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
The Mahindra Group, a multi billion dollar company based in Mumbai, has finally got a thumbs up from the country's civil aviation ministry to sell aircrafts in India.
Story first published: Monday, November 24, 2014, 10:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X