சாலை பயன்பாட்டுக்கு ஏற்ற வாகனங்கள்: போலரிஸ் தகவல்!

By Saravana

சாலை பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட புதிய வாகன மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக போலரிஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந் போலரிஸ் நிறுவனம் இந்தியாவில் ஏடிவி., வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. பொழுதுபோக்கு, போலீஸ் மற்றும் ராணுவம் போன்றவற்றிற்கு இந்த ஏடிவி வாகனங்கள் பயன்படுகின்றன. ஆனால், இந்த வாகனங்களை சாலையில் பயன்படுத்த முடியாது.

Polaris ATV

இந்த நிலையில், ஆட்டோமொபைல் செய்தி தளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள போலரிஸ் தலைவர் பங்கஜ் துபே எதிர்காலத்தில் சாலை பயன்பாட்டுக்கு ஏற்ற வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது விற்பனையில் இருக்கும் ஏடிவி., வாகனங்களின் அடிப்படையில் புதிய மாடல்கள் வரும் என்றும், சாலை பயன்பாட்டு அம்சங்கள் கொண்டதாக இருக்கும் வகையில், இன்டிகேட்டர் விளக்குகள், ரியர் நியூ கண்ணாடிகள், டயர்கள் போன்றவற்றை கொண்டிருக்கும்.

மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட எஞ்சினுடன் வரும் என்றும், அவற்றை ஆஃப்ரோடுகளிலும் பயன்படுத்த முடியும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவை குவாட்ரிசைக்கிள் பிரிவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது. மேலும், போலரிஸ் - ஐஷர் மோட்டார் கூட்டணியிலும் புதிய வாகன மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

Most Read Articles
English summary
Polaris India has had a successful run in India so far, largely due to lack of competition. There wide range of reliable ATVs have found many takers, from personal users to organizations for recreational use and also by the military and police forces.
Story first published: Saturday, May 24, 2014, 14:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X