வரும்29ல் அறிமுகமாகிறது உலகின் முதல் தயாரிப்பு நிலை பறக்கும் கார்!

By Saravana

வரும் 29ந் தேதி ஆஸ்திரியாவில் நடைபெறும் பயனீர் விழாவில் தயாரிப்பு நிலை அம்சங்கள் கொண்ட ஏரோமொபில் பறக்கும் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஸ்லோவோக்கியா நாட்டை சேர்ந்த பொறியாளர் குழு இந்த ஏரோமொபில் பறக்கும் காரை வடிவமைத்திருக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், தயாரிப்பு நிலை மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக ஏரோமொபில் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தயாரிப்பு நிலை மாடல்

தயாரிப்பு நிலை மாடல்

ஏரோமொபில் 2.5 என்ற புரோட்டோடைப் மாடல் தீவிர சோதனைகள் செய்யப்பட்டது. அதில், வெற்றிகரமாக பறந்ததையடுத்து, தற்போது அதனை தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்கிறது ஏரோமொபில். இந்த மாடல் ஏரோமொபில் 3.0 என்ற பெயரில் வெளியிடப்பட உள்ளது.

 நீண்ட ஆராய்ச்சி

நீண்ட ஆராய்ச்சி

1990ம் ஆண்டு இந்த ஏரோமொபில் பறக்கும் காரை வடிவமைக்கும் பணிகள் மற்றும் ஆராய்ச்சி துவங்கியது. இந்தநிலையில், பல ஆண்டுகால உழைப்பிற்கு பின்னர் இந்த காரின் தயாரிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

ஏரோமொபில் 3.0 பறக்கும் காரில் ரோட்டாக்ஸ் 912 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது வானில் 700 கிமீ தூரம் வரையிலும், தரையில் 875 கிமீ தூரம் வரையிலும் பயணிக்கும்.

 எரிபொருள்

எரிபொருள்

ஒரு மணிநேரம் பறப்பதற்கு 15 லிட்டர் எரிபொருள் செலவாகும். தரையில் செல்லும்போது லிட்டருக்கு 12.5 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

அதிகபட்சமாக மணிக்கு 200 கிமீ வேகத்தில் பறக்கும். தரையில் செல்லும்போது மணிக்கு 160கிமீ வேகம் வரை செல்லும். வரும் 29ந் தேதி இந்த காரை பற்றிய முழுமையான தகவல்கள் வெளியிடப்பட உள்ளன.

 
Most Read Articles

English summary
The AeroMobil 2.5 prototype has been successfully tested for take-off, flight and landing. The company will, therefore, unveil the world's first production ready flying car, the AeroMobil 3.0, on October 29, 2014 at the Pioneers Festival in Austria.
Story first published: Wednesday, October 15, 2014, 11:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X