இந்தியாவில் புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவிக்கு முன்பதிவு ஆரம்பம்!

By Ravichandran

மேம்படுத்தப்பட்ட புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி மாடலுக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

லேண்ட்ரோவர் நிறுவனத்தின் இந்த 2016 ரேஞ்ச்ரோவர் எவோக் கார்கள், தற்போது கிடைக்கும் எவோக் கார்களுக்கு மாற்றாக அமைய உள்ளது. இந்த புதிய கார்கள் சர்வதேச சந்தைகளிலும், இந்திய சந்தைகளிலும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்படுத்த பட உள்ளது.

அடுத்த மாதம் 2016 ரேஞ்ச் ரோவர் எவோக் காரை லேண்ட்ரோவர் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆரம்ப கட்டத்தில், 2016 ரேஞ்ச் ரோவர் எவோக் 2.2 லிட்டர் டீசல் இஞ்ஜினுடன் வர உள்ளது. பின்னர், இதன் பெட்ரோல் இஞ்ஜின் ஜொண்ட கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. சர்வதேச சந்தைகளில் உள்ளது போன்றே அதே சிறப்பம்சங்களுடன், இந்த பிரிமியம் எஸ்.யூ.வி இந்தியாவிலும் கிடைக்க உள்ளது.

2016 Range Rover Evoque Bookings Open In India Ahead Of Launch

உலகம் முழுவதிலும் ரேஞ்ச் ரோவர் எவோக் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது என ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியாவின் தலைமை அதிகாரி ரோஹித் சூரி தெரிவித்தார்.

இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் லேண்ட்ரோவர் நிறுவனம், முன்னதாக இந்தியாவில் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி-யை அறிமுகம் செய்துள்ளது.

டிஸ்கவரி ஸ்போர்ட் நான்கு வேரியண்ட்டுகளில், டீசல் இஞ்ஜின்களுடன் மட்டுமே கிடைக்கிறது. இது இந்தியாவின் மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனேவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

2016 ரேஞ்ச் ரோவர் எவோக் கார்கள், முழுவதுமாக கட்டமைக்கப்பட்டு இந்தியாவிற்கு இறக்குமதி செய்யடுமா அல்லது இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட உள்ளதா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.

Most Read Articles

English summary
2016 Range Rover Evoque Bookings Open In India Ahead Of its Launch. Land Rover will be replacing the Evoque, which is currently on sale, with the new 2016 Range Rover Evoque in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X