இந்திய வரலாற்றில் முதல்முறையாக... 51 மஹாராஜாக்கள் ஒன்றுகூடும் ஓர் விழா!

By Saravana

நாட்டின் பழம்பெருமையை எடுத்தியம்பும் திருவிழாவாக வரும் 21 மற்றும் 22 தேதிகளில் '21 கன் சல்யூட் விண்டேஜ் கார் ராலி' நடக்க இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் சென்னை ஆன்ரோடு விலை!

விண்டேஜ் கார்களின் பாரம்பரியத்தையும், பெருமைகளையும் போற்றும் இந்த விழாவில் நாடுமுழுவதும் இருந்து ஏராளமான பாரம்பரிய கார் பிரியர்களும், கார் ஆர்வலர்களும் பங்குபெற உள்ளனர். நம் நாட்டின் கார் பாரம்பரியத்தை சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில், நடைபெற இருக்கும் இந்த விழா பற்றிய 10 முக்கிய தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.


10 முக்கிய விஷயங்கள்

10 முக்கிய விஷயங்கள்

பாரம்பரியத்தை போன்றும் இந்த விழாவின் 10 சுவாரஸ்ய மற்றும் முக்கியத் தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

1.அட்டவணை

1.அட்டவணை

வரும் 21ந் தேதி காலை 8 மணிக்கு டெல்லி, செங்கோட்டையில் புறப்படும் பாரம்பரிய கார்களின் அணிவகுப்பு பிற்பகல் மதியம் 1 மணியளவில் குர்கான் லீஷெர் வேலி வரை நடக்க இருக்கிறது. மதியம் 1 மணியிலிருந்து இரவு 10 மணிவரை அங்கு பாரம்பரிய கார்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

அணிவகுப்பு பாதை

அணிவகுப்பு பாதை

டெல்லி, செங்கோட்டையிலிருந்து குர்கான் லீஷெர் வேலி பார்க் வரையிலான 52 கிமீ தூரத்துக்கு பாரம்பரிய கார்கள் அணிவகுத்து செல்ல இருக்கும் பாதையின் வரைபடத்தை படத்தில் காணலாம்.

முதல்முறையாக...

முதல்முறையாக...

விண்டேஜ் கார்கள் மூலம் இந்தியாவின் கார் பாரம்பரியத்துக்கு பெருமை சேர்த்ததில் முக்கிய பங்கு வகித்த 51 மஹாராஜாக்கள் இந்த பாரம்பரிய கார் அணிவகுப்பில் பங்குபெற்று பெருமை சேர்க்க உள்ளனர்.

பிரம்மாண்ட அணிவகுப்பு

பிரம்மாண்ட அணிவகுப்பு

இந்த ஆண்டு அணிவகுப்பு மிகவும் சீரிய முறையில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 201 பாரம்பரிய கார்களும், 50 பாரம்பரிய மோட்டார்சைக்கிள்களும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றன.

 விழா வித்தகர்

விழா வித்தகர்

இந்த விழாவை டெனெப் அண்ட் போலூக்ஸ் வாடகை டாக்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மதன் மோகன் ஏற்று நடத்துகிறார். இவர் பாரம்பரிய கார் ஆர்வலரும், சேகரிப்பாளரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் ஆஃப் இந்தியா அமைப்பு இணைந்து நடத்துகிறது.

நடுவர்கள்

நடுவர்கள்

இந்த ஆண்டு விழாவிற்கான நடுவர்களாக பர்வானியின் 58வது மஹாராஜாவும், பாரம்பரிய கார் பிரியரான எச்எச் மஹாரானா ஷாகிப் மன்வேந்திரா சிங் பகதூர் தலைமை நடுவராக செயலாற்றுவார். இந்திய விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் கிளப் தலைவர் நிதின் டோஸா மற்றும் ராஜா முஸாபர் அலி உள்ளிட்டோர் நடுவர்களாக செயலாற்ற உள்ளனர்.

பரிசு

பரிசு

இந்த ஆண்டு பாரம்பரிய கார்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் பரிசுகள் வழங்கபப்பட உள்ளன. பழமையா விண்டேஜ் கார், சிறப்பாக பராமரிக்கப்பட்ட கார் என பல்வேறு பிரிவுகளில் இந்த பரிசுகள் வழங்கப்படும்.

 இசை நிகழ்ச்சிகள்

இசை நிகழ்ச்சிகள்

பிரபல இசை கலைஞர்களின் மற்றும் குழுவினரின் நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன. வதாலி சகோதரர்கள் மற்றும் சுஃபி குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பேண்ட் இசை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன.

டிக்கெட்டுகள்

டிக்கெட்டுகள்

'புக் மை ஷோ' தளத்தின் மூலம் இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை பெறமுடியும்.

 பாரம்பரிய திருவிழா

பாரம்பரிய திருவிழா

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விழாவை மிகவும் சிறப்பாக நடத்த ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்தும் விண்டேஜ் கார்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள இருப்பதால் விண்டேஜ் கார் ஆர்வலர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Most Read Articles
English summary
If you're into vintage automobiles, then you must make it a point to somehow get to Delhi and Gurgaon for the two days of the fifth edition of the 21 Gun Salute Vintage Car Rally. The event promises to be bigger and better this year, with unprecedented participation expected.The following slides will highlight 10 things you should know about the upcoming event that is no doubt going to be a grand spectacle.
Story first published: Thursday, February 5, 2015, 14:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X