என்ன அழகு, எவ்வளவு கம்பீரம்... விரைவில் இந்தியா வரும் 2016 ரேஞ்ச்ரோவர் எவோக்!!

By Saravana

கடந்த 2011ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற மாடலாக வலம் வருகிறது. இதுவரை 4 லட்சம் எவோக் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், கால மாற்றத்துக்கு ஏற்ப, பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 2016 மாடலாக ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி மேம்படுத்தப்பட்டது. டிசைன் மாற்றங்கள், புதிய வசதிகள் தவிர்த்து, ஜாகுவார் - லேண்ட்ரோவர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய இன்ஜெனியம் டீசல் எஞ்சினும் இந்த புதிய மாடலில் இடம்பிடித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட இந்த புதிய மாடல் விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த புதிய மாடல் பற்றிய முழுமையானத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இறக்குமதி

இறக்குமதி

இந்தியாவிற்கு ஏற்ப சில மாறுதல்களை செய்வதற்காகவும், ஆய்வுகளுக்காகவும் இரண்டு 2016 ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவிகள் சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், நம் நாட்டு மார்க்கெட்டிலும் 2016 ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் அசெம்பிள்

இந்தியாவில் அசெம்பிள்

கடந்த மார்ச் மாதம் முதல் ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுகிறது. எனவே, புதிய மாடலும் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுவது திண்ணமான ஒன்று.

டிசைன் மாற்றங்கள்

டிசைன் மாற்றங்கள்

முகப்பு டிசைனில் முக்கியமாக பம்பர் மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. பெரிய ஏர் இன்டேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட் சிஸ்டம் இடம்பிடித்திருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குளும் இடம்பெற்றிருக்கிறது. முகப்பு க்ரில் அமைப்பிலும் புதிய மாறுதல்களுடன் கம்பீரத்தை கூட்டிக் கொண்டிருக்கிறது.

விரைவில் 2016 ரேஞ்ச்ரோவர் எவோக்

பக்கவாட்டில் பெரிய அளவிலான டிசைன் மாற்றங்கள் செய்யப்படவில்லை. அதேநேரத்தில், புதிய அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் கம்பீரத்தை பன்மடங்கு கூட்டி காட்டுவது, அதன் புதிய அலாய் வீல்கள்தான். மூன்றுவிதமான அலாய் வீல் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

விரைவில் 2016 ரேஞ்ச்ரோவர் எவோக்

எல்இடி பிரேக் லைட் சிஸ்டம், புதிய டெயில்கேட் ஸ்பாய்லர் ஆகியவை முக்கிய மாற்றங்கள். பின்புற பம்பருக்கு கீழே பயணிகளின் கால்கள் நகர்வு தெரிந்தால், பின்புற கதவின் பூட்டு திறந்து கொள்ளும். இது புதிய வசதியாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், காரின் சாவி அருகில் இருந்தால் மட்டுமே இவ்வாறு திறக்கும் என்பதால், கவலைப்பட தேவையில்லை.

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியரும் குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்களை சந்தித்துள்ளது. புதிய 8 இன்ச் தொடுதிரை கொண்ட தகவல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை பெறக்கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை ஓட்டுனர் இயக்குவதற்கு மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வசதிகள்

வசதிகள்

காரில் புதிய 3ஜி ஆன்டெனா கொடுக்கப்பட்டிருக்கிறது. கார் வேகமாக செல்லும்போது, உள்ளே பயணிப்பவர்களுக்கு சிறப்பான மொபைல்போன் சிக்னலை இந்த ஆன்டெனா பெற்றுத் தரும். மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகளின் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. புதிய அப்ஹோல்ஸ்டரியும் காரின் பிரமியம் மாடலுக்கான அந்தஸ்தை கூட்டியிருக்கிறது. உயர் வேரியண்ட்டுகளில் பின்புற பயணிகளுக்கு தனியாக சிறிய டிவி திரைகள் உள்ளன. வயர்லெஸ் ஹெட்போன், 17 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் என இந்த பட்டியல் நீண்டு செல்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய மாடலில் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் உருவாகியிருக்கும் புதிய 2.0 லிட்டர் இன்ஜெனியம் டீசல் எஞ்சின் இடம்பெற்றிருக்கிறது. அலுமினியம் கட்டமைப்பில் உருவாகியிருக்கும் இந்த புதிய இன்ஜெனியம் டீசல் எஞ்சின் முந்தைய டீசல் எஞ்சினைவிட 30 கிலோ வரை எடை குறைவானது. இந்த டீசல் எஞ்சின் 148 பிஎச்பி பவர் மற்றும் 178 பிஎச்பி பவரை அளிக்கும் இருவிதமான ஆப்ஷன்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 236 பிஎச்பி பவரை அளிக்க வல்லது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

தடம் மாறுதல் குறித்து எச்சரிக்கும் வசதி, அவசர காலத்திற்கான தானியங்கி பிரேக் சிஸ்டம், ஓட்டுனர் அயர்ந்துவிடுவதை கண்டறிந்து எச்சரிக்கும் வசதி ஆகியவை கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற்றிருக்கிறது.

Most Read Articles
English summary
JLR To Launch 2016 Range Rover Evoque in India Soon.
Story first published: Friday, September 18, 2015, 10:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X