லேண்ட்ரோவர் எவோக் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் - விபரம்

By Saravana

லேண்ட்ரோவர் எவோக் சொகுசு எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் படங்கள், விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அடுத்த மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில் முறைப்படி, அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய கார் டிசைனில் மாற்றங்கள் மற்றும் புதிய எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது.

டிசைன்

டிசைன்

முன்புறத்தில் முக்கிய மாற்றங்களாக பம்பர் டிசைன் மற்றும் புதிய எல்இடி பகல்நேர விளக்குகள் உள்ளன. புதிய அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எல்இடி ஸ்டாப்லைட், புதிய டெயில்கேட் ஸ்பாய்லர் போன்றவை பின்புறத்தில் குறிப்பிட வேண்டிய மாற்றங்கள்.

இன்டிரியர்

இன்டிரியர்

புதிய இருக்கைகள், புதிய டோர் பேனல்கள், சாஃப்ட் டச் பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புதிய 8 இஞ்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே தற்போது இடம்பிடித்திருக்கிறது. டிஎஃப்டி திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் புதியது. ஆட்டமேட்டிக் எமர்ஜென்சி பிரேக் சிஸ்டம், ஓட்டுனர் அயர்ந்துவிடுவதை கண்டறிந்து எச்சரிக்கும் வசதி போன்றவையும் இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவியில் ஜாகுவார் லேண்ட்ரோவரின் புதிய 2.0 லிட்டர் இன்ஜெனியம் டீசல் எஞ்சினுடன் வர இருக்கிறது. ஒரு மாடல் 148 பிஎச்பி பவரை அளிக்கும் விதத்திலும், மற்றொன்று 178 பிஎச்பி பவரை அளிக்கும் விதத்திலும் வருகின்றன. இதுதவிர, ஏற்கனவே இருந்த அதே 237 பிஎச்பி பவரை அளிக்கும் எஐ4 பெட்ரோல் எஞ்சின் மாடலில் புதிய எவோக் வர இருக்கிறது. பெட்ரோல் மாடலில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனும், டீசல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாகவும் வருகிறது.

மூன்று டிரைவ் ஆப்ஷன்

மூன்று டிரைவ் ஆப்ஷன்

2 வீல் டிரைவ், 4 வீல் டிரைவ் மற்றும் ஆக்டிவ் டிரைவ்லைன் என்ற மூன்றுவிதமான டிரைவிங் சிஸ்டம் கொண்ட மாடல்களில் வர இருக்கிறது. ஆக்டிவ் டிரைவ்லைன் மாடலில் சாலை நிலை, வேகத்துக்கு தகுந்தவாறு 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் தானாகவே மாறிக் கொள்ளும் தொழில்நுட்பம் கொண்டது.

புதிய சஸ்பென்ஷன்

புதிய சஸ்பென்ஷன்

இந்த எஸ்யூவியின் இலகுவான இன்ஜெனியம் எஞ்சினுக்காக முன்புறத்தில் சப் ப்ரேம் கொண்ட புதிய சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் புதிய புஷ்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, பெரிய பிரேக் டிஸ்க்குகளும் புதிய மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன.

 கேப்ரியோ மாடல்

கேப்ரியோ மாடல்

புதிய எவோக் காரின் கேப்ரியோலே மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆனால், அதன் அறிமுகம் குறித்த உறுதியானத் தகவல் இதுவரை இல்லை. புதிய எவோக் காரின் கூடுதல் விபரங்கள் ஜெனீவா மோட்டார் ஷோவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Most Read Articles

English summary
Land Rover has pulled the wraps from its freshly facelifted Evoque, revealed today ahead of a Geneva Motor Show debut next month.
Story first published: Monday, February 23, 2015, 11:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X