புதிய மெக்லாரன் 650எஸ் கேன்-ஆம் லிமிடெட் எடிஷன் அறிமுகம்

By Ravichandran

கேன்- ஆம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் கனடா- அமெரிக்க கார் பந்தய தொடரில் மெக்லாரன் நிறுவனம் பங்கேற்று 50ம் ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த பொன்விழாவை கொண்டாடும் வகையில், மெக்லாரன் நிறுவனம் ஒரு ஸ்பெஷல் காரை அறிமுகம் செய்துள்ளது.

மெக்லாரன் 650 எஸ் கேன்-ஆம் லிமிடெட் எடிஷன் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும், இந்த பிரத்யேக அம்சங்கள் கொண்ட கார்கள் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தய ரசிகர்களை வெகுவாக கவரும் அம்சங்களுடன் வந்துள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

உலக அளவில், இந்த லிமிடெட் எடிஷன் ரகத்தில் 50 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த கேன்-ஆம் கார்கள், மெக்லாரன் 650 எஸ் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

அடிப்படை மாடல்

அடிப்படை மாடல்

1967 முதல் 1971 முதல் வரை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளும் மெக்லாரன் நிறுவனம் கேன்-ஆம் ஸ்போர்ட்ஸ் கார் ரேசிங்கில் வென்றது. அப்போது உபயோகிக்கப்பட்ட கார்களை மையமாக வைத்தே, தற்போது வெளியாகும் லிமிடெட் எடிஷன் கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கார்கள் திறந்த அமைப்புடைய கூரை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளன.

சிறப்புகள்

சிறப்புகள்

கார்பன் ஃபைபர் மிகுதியான அளவில் உபயோகிக்கப்பட்டுள்ளது. மடங்கக்கூடிய வகையிலான திடமான மேல் பானட், ஏர்- பிரேக் சிஸ்டம், முன்புறத்திற்கான ஸ்பிளிட்டர், சில் கவர் உள்ளிட்டவை கார்பன் ஃபைபரால் செய்யப்பட்டுள்ளது.

இன்டிரியர்

இன்டிரியர்

இதில், ஸ்டீலால் ஆன நான்கு சைலன்சர்கள் உள்ளன. லெதர் மற்றும் அல்காண்டரா ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் மற்றும் கார்பன் ஃபைபரால் ஆன பாகங்கள் என பல்வேறு அம்சங்கள் காரின் உட்புற அழகை கூட்டுகின்றது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

இந்த லிமிடெட் எடிஷன் கார்கள் மார்ஸ் ரெட், பப்பாயா ஸ்பார்க் (ஆரஞ்சு) மற்றும் ஆனிக்ஸ் பிளாக் உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இதன் 3.8 லிட்டர் ட்வின் டர்போ வி8 இஞ்ஜின், அதிகபட்சம் 650 பிஎஸ் பவரையும், 671 என்எம் டார்க்கையும் வெளியிடும் திறன் கொண்டதாகும். இத்தகைய திறன்மிக்க இஞ்ஜினால் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3 நொடிகளிலேயே எட்ட முடியும். இது, அதிகப்படியாக, மணிக்கு 329 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

 விலை

விலை

இந்த மெக்லாரன் 650 எஸ் கேன்-ஆம் லிமிடெட் எடிஷன் காரின் விலை, இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.05 கோடி.

Most Read Articles
English summary
McLaren has launched the limited edition 650S Can-Am to celebrate their 50 years of Can-Am racing. The limited edition cars are limited to just 50 units worldwide.
Story first published: Monday, October 12, 2015, 11:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X