கேட்டாலும் கிடைக்காது... அனைத்து மெக்லாரன் 675எல்டி கார்களும் விற்று தீர்ந்தன!!

By Saravana

கடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனீவா மோட்டோர் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட மெக்லாரன் 675எல்டி கார்கள் அனைத்திற்குமான விற்பனை முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கார் மெக்லாரன் 650எஸ் காரின் அடிப்படையில் டிசைன் செய்யப்பட்ட மாடல். ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கான கூடுதல் சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த காரின் ஸ்பெஷல் என்னென்ன என்பதை ஸ்லைடரில் காணலாம்.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

மொத்தம் 500 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த கார்கள் அனைத்திற்கும் தற்போது முன்பதிவு முடிந்துவிட்டது.

 இலகு எடை

இலகு எடை

மெக்லாரன் 650எஸ் காரின் அடிப்படையிலான மாடல் என்றாலும், இது 100 கிலோ எடை குறைவானதாக உருவாக்கப்பட்டுள்ளது. கார்பன் ஃபைபர் ஏர் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

 பெயர் காரணம்

பெயர் காரணம்

இந்த காரின் பெயரில் இருக்கும் LT என்ற ஆங்கில எழுத்துக்கள் Long tail என்பதை குறிக்கின்றன. அதாவது, இதுவரை வெளிவந்த மெக்லாரன் கார்களிலேயே நீளமான வால்பகுதியை கொண்ட மாடலாக இதனை மெக்லாரன் குறிப்பிடுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

666 எச்பி பவரையும், 700என்எம் டார்க்கையும் வழங்கும் 3.8 லிட்டர் இரட்டை டர்போசார்ஜர் கொண்ட எஞ்சின் இருக்கிறது. எஞ்சின் ஆற்றல் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது. அதிகபட்ச வேகம் மணிக்கு 330கிமீ வரை எட்டக்கூடியது.

 இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியர் அமைப்பு மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கருப்பு, சிவப்பு கார்பன் ஃபைபர் அலங்காரம் வசீகரிக்கும் அம்சம். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. பக்கெட் இருக்கைகளும் குறிப்பிட்டு கூறலாம்.

விற்பனைக்கு அறிமுகம்

விற்பனைக்கு அறிமுகம்

வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற இறுக்கும் வில்டன் கிளாசிக்ஸ் மற்றும் சூப்பர் கார் ஷோவில் இந்த புதிய கார் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

 விலை விபரம்

விலை விபரம்

இந்த புதிய மெக்லாரன் ஸ்போர்ட்ஸ் கார் 3,49,500 டாலர் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. வரும் ஜூலை மாதம் முதல் டெலிவிரி துவங்கப்பட உள்ளது.

Most Read Articles
மேலும்... #மெக்லாரன் #mclaren
English summary
Introduced a couple of months ago during the 2015 Geneva Motor Show, the McLaren 675LT has managed to sell out already!
Story first published: Saturday, May 9, 2015, 10:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X